இலங்கையின் அரையிறுதிக் கனவு நனவாகுமா… இன்று தென்ஆப்ரிக்காவுடன் பலப்பரிட்சை! #Preview

Updated: 28 June 2019 13:22 IST

தற்போதைய நிலையில் புள்ளிகள் பட்டியலில், இலங்கை 7வது இடத்தில் இருக்கிறது.

Sri Lanka vs South Africa: Sri Lanka Look To Keep Semi-Finals Hope Alive With Win Over South Africa
அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்புள்ளது © AFP

2019 உலகக் கோப்பைத் தொடரில் இன்று தென் ஆப்ரிக்கா ,இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி, தனது அரையிறுதிக் கனவை,இலங்கைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கும். உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள தென் ஆப்ரிக்கஅணி, இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று கவுரவமாக தொடரை முடிக்க நினைக்கிறது. தற்போதைய நிலையில் புள்ளிகள் பட்டியலில், இலங்கை 7வது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்புள்ளது. 

“பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் விளையாடிய விதம் மிகுந்த அவமானமாக உள்ளது. ஒரு அடி முன்னே நகர்ந்தால் இரண்டு அடி பின்னோக்கி வீழ்கிறோம். ஒரு நல்ல அணிக்கு இது அழகல்ல. மிகவும் சுமாரான அணி போல நாங்கள் விளையாடி வருகிறோம். 

அணியில் பலரும் நம்பிக்கை இல்லாமல் களத்தில் ஆடுகின்றனர். ஒரே தவறை மறுபடியும் மறுபடியும் செய்து வருகிறார்கள்” என்று கடைசியாக பாகிஸ்தான் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து தென் ஆப்ரிக்க கேப்டன் டூப்ளிசிஸ் நொத்நுகொண்டார். 

இரண்டு அணிகளுமே பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகின்றன. இலங்கை அணியின் பவுலிங் மலிங்காவின் தலைமையால் வலுவாக உள்ளது. கடைசியாக அந்த அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியில் 233 ரன்களை வெற்றிகரமாக டிஃபண்டு செய்தது. இந்த முறை இலங்கை பேட்ஸ்மேன்களும் கைகொடுத்தால் வெற்றி சாத்தியமாகும். 

(PTI தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • இலங்கை, புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது
  • தென் ஆப்ரிக்கா, உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது
  • அடுத்து வரும் 3 போட்டிகளையும் இலங்கை வென்றாக வேண்டும்
தொடர்புடைய கட்டுரைகள்
World Cup Live: கருணரத்னேவின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா!
World Cup Live: கருணரத்னேவின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா!
இலங்கையின் அரையிறுதிக் கனவு நனவாகுமா… இன்று தென்ஆப்ரிக்காவுடன் பலப்பரிட்சை! #Preview
இலங்கையின் அரையிறுதிக் கனவு நனவாகுமா… இன்று தென்ஆப்ரிக்காவுடன் பலப்பரிட்சை! #Preview
Advertisement