உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை? கணிக்கும் கங்குலி!

Updated: 26 April 2019 10:34 IST

2003 உலகக் கோப்பையில் இந்தியாவை இறுதிபோட்டிக்கு அழைத்து சென்றார் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி.

Sourav Ganguly Picks His World Cup 2019 Semifinalists
இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி, 2019 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளை கணித்துள்ளார். © BCCI/IPL

உலகக் கோப்பை தொடருக்கு ஒரு மாதம் இருக்கும் நேரத்தில் அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துவிட்டன. 2003 உலகக் கோப்பையில் இந்தியாவை இறுதிபோட்டிக்கு அழைத்து சென்ற இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி, 2019 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளை கணித்துள்ளார். இந்தியாவை உலகக் கோப்பையை வெல்லும் அணியாக கணித்துள்ள கங்குலி, அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெறும் என்று கூறியுள்ளார்.

"இந்த உலகக் கோப்பை மிகவும் கடினமான தொடராக இருக்கும். காரணம் அனைத்து அணிகளுமே சிறந்த அணிகள். அதில் மிகச் சிறந்த நான்கு அணிகள் அரையிறுதிக்குள் செல்லும்" என்றார். இந்திய அணி கோப்பையை வெல்லும் முழு வலிமை கொண்ட அணியாக இருப்பதாக கூறினார்.

"குல்தீப் ஒன்பது போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தாது. அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர்தான்" என்று கங்குலி தெரிவித்தார்.

"டெல்லி, ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வருகிறது. சில நேரங்களில், சில விஷயங்கள் கைகொடுக்கும். இந்த முறை டெல்லிக்கு சில விஷயங்கள் சரியாக அமைந்துள்ளது" என்றார்.

டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியை வென்றாலே டெல்லி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும்
  • இந்தியாவை உலகக் கோப்பையை வெல்லும் அணியாக கணித்துள்ளார்
  • குல்தீப் ஒரு சிரந்த பந்துவீச்சாளர்தான் என்றார் கங்குலி
தொடர்புடைய கட்டுரைகள்
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"கடினமான சூழலில் விளையாடிய இரு அணிகளுக்கும் நன்றி" - சவுரவ் கங்குலி!
"கடினமான சூழலில் விளையாடிய இரு அணிகளுக்கும் நன்றி" - சவுரவ் கங்குலி!
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
India vs Bangladesh: "முதல் டி20 போட்டி டெல்லியில் தான் நடக்கும்" - கங்குலி
India vs Bangladesh: "முதல் டி20 போட்டி டெல்லியில் தான் நடக்கும்" - கங்குலி
பெங்களூரு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துகொண்ட சவுரவ் கங்குலி!
பெங்களூரு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துகொண்ட சவுரவ் கங்குலி!
Advertisement