
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆல்-ரவுண்டரான ஷோயப் மாலிக், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று வங்கதேசத்தை எதிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆடிய லீக் போட்டியுடன் இந்த ஓய்வு அறிவிப்பு வந்துள்ளது. மாலிக், தொடர்ந்து டி20 போட்டிகளில் பாகிஸ்தான் சார்பில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்விகண்ட பிறகு, ஷோயப் மாலிக், பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானார். அந்தப் போட்டியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பிடிக்கவில்லை. பாகிஸ்தான் சார்பில் 287 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள மாலிக், 33.55 சராசரியில் 7534 ரன்களை குவித்துள்ளார். அதேபோல 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்களை விளாசியுள்ளார்.
Today I retire from One Day International cricket. Huge Thank you to all the players I have played with, coaches I have trained under, family, friends, media, and sponsors. Most importantly my fans, I love you all#PakistanZindabad pic.twitter.com/zlYvhNk8n0
— Shoaib Malik (@realshoaibmalik) July 5, 2019
“இந்த உலகக் கோப்பைத் தொடருடன் நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று அறிவித்திருந்தேன். அதேபோல இப்போது ஓய்வு பெற்றுள்ளேன். ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை எப்போதும் நான் விரும்பினேன். இதில் ஓய்வு பெறுவது வருத்தம்தான். ஆனால், என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என்பதில் மகிழ்ச்சி. இது டி20 போட்டிகளில் நான் அதிக கவனம் செலுத்த உதவும்” என்று வங்கதேசப் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினார் மாலிக்.
தனது ஓய்வு குறித்து ட்விட்டரில் ஷோயப் மாலிக், “இன்றுடன் நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றேன். இதுவரை என்னுடன் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் நன்றி. என்னை கோச் செய்த பயிற்சியாளர்களுக்கு, குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு, ஊடகங்களுக்கு, ஸ்பான்சர்களுக்கு நன்றி. இவை எல்லாவற்றையும்விட எனது ரசிகர்களுக்கு நன்றி. ஐ லவ் யூ ஆல்” என்று உருக்கமாக ட்வீட்டியிருந்தார்.
Shoaib Malik "I am retiring from ODIs" #Cricket #cwc19 pic.twitter.com/F2MSVYdFBq
— Saj Sadiq (@Saj_PakPassion) July 5, 2019
centuries
— Cricket World Cup (@cricketworldcup) July 5, 2019
half-centuries
wickets
runs
Shoaib Malik has retired from ODI cricket. What a career he's had #PAKvBAN | #CWC19 pic.twitter.com/DJqc0w4YrO