காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் விலகல்! அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்!

Updated: 19 June 2019 17:19 IST

ஷிகர் தவானுக்கு மாற்றாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Injured Shikhar Dhawan Ruled Out Of World Cup, Rishabh Pant Replaces Him
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவானுக்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டது. © AFP

பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர்தவான் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் பெருவிரலை பதம் பார்த்தது. இதன்பின்னர் அவர் ஃபீல்டிங் செய்யவும் வரவில்லை. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் தவான் பங்கேற்கவில்லை. 
 


நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த விராட் கோலி, 'தவான் விரைவில் குணம் அடைவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் உடல் தகுதி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. உலகக்கோப்பை தொடரில் பாதி ஆட்டம் முடிந்துள்ள நிலையில் மீதியுள்ள ஆட்டங்களில் அவர் பங்கேற்பார் என நம்புகிறோம்' என்று கூறியிருந்தார். 
 

இந்த நிலையில் தவானின் நிலைமை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இங்கிலாந்தில்தான் தங்கியிருப்பார் என்று பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்ற்கிடையே தவானுக்கு மாற்றாக ரிஷப் பண்ட் உலகக் கோப்பை தொடரில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிசிசிஐ நிர்வாகத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து பண்ட் இங்கிலாந்து விரைகிறார். 

(With PTI Inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • Shikhar Dhawan was Wednesday ruled out of the ongoing World Cup
  • Shikhar Dhawan has been replaced by wicket-keeper batsman Rishabh Pant
  • Shikhar Dhawan picked up the injury during the clash against Australia
தொடர்புடைய கட்டுரைகள்
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
20ம் ஆண்டு கார்கில் தினம்: விளையாட்டு வீரர்கள் அஞ்சலி!
20ம் ஆண்டு கார்கில் தினம்: விளையாட்டு வீரர்கள் அஞ்சலி!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன் ஷிகர் தவான் தீவிர பயிற்சி!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன் ஷிகர் தவான் தீவிர பயிற்சி!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
Advertisement