"தடைக்குபின் சர்வதேச போட்டிக்கு திரும்ப என் மனைவியே காரணம்" - வார்னர்

Updated: 13 June 2019 13:57 IST

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் சதமடித்த பின்பு பேசிய வார்னர் தனது கம்பேக்கிற்கு தனது மனைவி கேண்டிஸ்தான் காரணம் என்றார்.

David Warner Credits Wife Candice For Impressive Comeback, Says "She
வார்னர், பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்கு பின் முதல்முறையாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். © Twitter

வார்னர், பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்கு பின் முதல்முறையாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் சதமடித்த பின்பு பேசிய அவர் தனது கம்பேக்கிற்கு தனது மனைவி கேண்டிஸ்தான் காரணம் என்றார். இந்த போட்டியை ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வாழ்க்கையின் கடினமான காலத்தில் கேண்டிஸ் தன்னை ஊக்கப்படுத்தியதாக கூறினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மார்ச் 2018ல் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாருக்காக வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்தது. அதற்கு பின் அணிக்கு திரும்பிய வார்னர், 89,3,56,107 ரன்களை குவித்துள்ளார்.

"நான் எப்போது வேண்டுமானாலும் சர்வதேச போட்டிக்கு திரும்பக்கூடிய நிலையில் இருந்தேன் அதற்கு முக்கிய காரணம் என் மனைவிதான், ஷி இஸ் ஜஸ்ட் ராக்" என்றார்.

"அவள் மிகவும் வலிமையான பெண். முதல் மூன்று மாதங்கள் என் அறையை விட்டு எழுந்திரிக்கவே சிரமப்பட்டேன். அவள் தான் மிகவும் ஊக்கம் தந்தாள்" என்றார்.

கேண்டிஸ் தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். தற்போது இங்கிலாந்தில் தான் கேண்டிஸும் உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கு எதிரான போட்டிக்கு பின் அணி வீரர்கள் குடும்பத்துடன் இணையலாம் என்று கூறப்பட்டிருந்தது. "இதுநாள் வரையில் பிரிந்திருந்த குடும்பத்துடன் தற்போது இணைய இருப்பது மகிழ்ச்சி" என்றார்.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி நாடு திரும்பிய வார்னர் விமான நிலையத்தில் பதிலளிக்காமல் திரும்பினார். தற்போதும் அது குறித்து எதுவும் சொல்ல விரும்பவதில்லை என்று கூறினார்.

உலகக் கோப்பையில் ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதத்தை விளாசியுள்ளார். இந்தியாவுடனான அரைசதம் மிக அதிக பந்துகளை எதிர்கொண்டு வந்தது விமர்சனத்துக்குள்ளானது.

"ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நான் சரியாக ஆடவில்லை என்று நினைத்தேன். ஆனால் தற்போது அதை சரி செய்துள்ளேன்" என்றார் வார்னர்.

Comments
ஹைலைட்ஸ்
  • தடைக்கு பின் முதல்முறையாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார் வார்னர்
  • தனது கம்பேக்கிற்கு தனது மனைவி கேண்டிஸ்தான் காரணம் என்றார்
  • உலகக் கோப்பையில் இதுவரை வார்னர் 89,3,56,107 ரன்களை குவித்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
தன்னை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு வார்னரின் புத்திசாலித்தனமான பதில்!
தன்னை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு வார்னரின் புத்திசாலித்தனமான பதில்!
வார்னரை உப்புத்தாளை வைத்து வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள்!
வார்னரை உப்புத்தாளை வைத்து வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள்!
தடைக்கு பின் ஆஷஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட்!
தடைக்கு பின் ஆஷஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட்!
டேவிட் வார்னருக்கு புதியதாக சூட்டப்பட்டுள்ள ‘பட்டப் பெயர்’ இதுதான்!
டேவிட் வார்னருக்கு புதியதாக சூட்டப்பட்டுள்ள ‘பட்டப் பெயர்’ இதுதான்!
"தடைக்குபின் சர்வதேச போட்டிக்கு திரும்ப என் மனைவியே காரணம்" - வார்னர்
"தடைக்குபின் சர்வதேச போட்டிக்கு திரும்ப என் மனைவியே காரணம்" - வார்னர்
Advertisement