அரையிறுதியில் தோனி 7வது இடத்தில் ஆடியது ஏன்? - விளக்கம் கூறிய ரவி சாஸ்த்ரி

Updated: 13 July 2019 11:45 IST

240 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இந்திய அணியில், ரிஷ்ப் பன்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆட வந்த பிறகு தோனி களமிறங்கினார்.

Ravi Shastri Clears The Air On MS Dhoni
ரவி சாஸ்திரி, தோனி 7வது இடத்தில் பேட் செய்ய வந்தது அணியினரின் முடிவு என்று கூறியுள்ளார். © AFP

எம்.எஸ் தோனி, கிரிக்கெட் போட்டிகளில் இக்கட்டான சூழலில் அணியை வெற்றி பெற செய்யும் ஃபினிஷர் என்ற பெருமைக்குரியவர். உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தோனி வழக்கமான இடத்தை விட்டு ஏழாவது இடத்தில் ஆட வந்தார்.இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் இந்தியா தோற்றது. தோனி தாமதமாக ஆட வந்தது ஏன் என்று நிர்வாகத்திடம் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 240 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இந்திய அணியில், ரிஷ்ப் பன்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆட வந்த பிறகு தோனி களமிறங்கினார். ஜடேஜாவுடன் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தார் தோனி. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனி 7வது இடத்தில் பேட் செய்ய வந்தது அணியினரின் முடிவு என்று கூறியுள்ளார். சாஸ்திரியின் ஒப்பந்தம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தோனியின் அனுபவம் அணிக்கு தேவையாக இருந்தது என்று அவர் கூறினார்.

"இந்த முடிவு ஒட்டு மொத்த அணியினர் எடுத்தது. எல்லோருக்கும் இது சரியான முடிவாக தான் தோன்றியது. கடைசியாக அனைவருக்கும் என்ன தேவைப்படுகிறது, தோனி சீக்கிரம் வந்து சீக்கிரம் வெளியேறி இருக்க வேண்டுமா? அப்படியானால், ஆட்டம் விரைவில் முடிந்திருக்கும்" என்று ரவி சாஸ்த்ரி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தெரிவித்தார்.

"அவருடைய அனுபவம் ஆட்டத்தின் கடைசியில் தேவைப்பட்டது. அவர் எப்போதுமே சிறந்த ஃபினிஷராக உள்ளார். அவரை சரியான நேரத்தில் பயன்படுத்தவில்லை என்றார் குற்றவாளி ஆகிவிடுவோம். எனவே ஒட்டுமொத்த அணியும் அதில் தெளிவாக இருந்தது" என்றார்.

மோசமாக தொடங்கிய இன்னிங்ஸ், தோனி மற்றும் ஜடேஜாவின் பார்ட்னர்ஷிப்பால் 92/6 என்ற நிலையிலிருந்து 208/7 என்றானது.

பிடிஐ தகவல் படி, ரவி சாஸ்த்ரி மற்றும் விராட் கோலி இருவரும் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பிறகு மறுஆய்வுக்காக நிர்வாகக் குழுவினரை சந்திக்கவுள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • ரிஷ்ப் பன்ட், தினேஷ் கார்த்திக், பாண்ட்யா வந்த பிறகு தோனி களமிறங்கினார்
  • சிறந்த ஃபினிஷரான தோனி ஏழாவது இடத்தில் ஆட வந்தார்
  • கோலி மற்றும் ரவி சாஸ்த்ரி இருவரும் நிர்வாகக் குழுவை சந்திக்கவுள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
Advertisement