'இந்தியாவை வீழ்த்தும் திறன் எங்களுக்கு உண்டு!'- சீண்டும் ஷகிப்

Updated: 25 June 2019 12:13 IST

ஜூலை 2ஆம் தேதி இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது பங்களாதேஷ் அணி. 

"We
புள்ளிகள் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது பங்களாதேஷ் © AFP

2019 உலகக்கோப்பை தொடரில் கவனிக்கதக்க அணியாக திகழ்வது பங்களாதேஷ் அணியாகும். தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டிஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகளை பின்னுக்கு தள்ளி புள்ளிகள் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருப்பது பங்களாதேஷ் அணியாகும்.

ஏழு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, மூன்று தோல்விகளுடன் ஏழு புள்ளிகள் பெற்றுள்ள பங்களாதேஷ் அணி, அடுத்டஹ்து இந்தியாவை எதிர்கொளகிறது.

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரான ஷகிப், டாப் பார்ம்மில் உள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் மற்றும் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா அணியை குறித்து ஷகிப், ‘அவர்கள் ஒரு டாப் அணியாகும். உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்று இந்தியா ஆகும். அவர்களுக்கு எதிராக விளையாடிவது கடினமாகும். இருப்பினும் நாங்கள் எங்களது முழு திறனை வெளிப்படுத்துவோம். இந்தியாவை வீழ்த்தும் திறன் எங்களுக்கு இருப்பதாக எண்ணுகிறோம்' என கூறினார்.

2007 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை பங்களாதேஷ் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் அரைசதம் மற்றும் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர் ஷகிப். அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இதனை செய்தார். ஏற்கனவே 2011 உலகக்கோப்பை தொடரில் ஐயர்லாந்து அணிக்கு எதிராக அரைசதமும் ஐந்து விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார் இந்தியாவின் யுவராஜ் சிங்.

ஜூலை 2ஆம் தேதி இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது பங்களாதேஷ் அணி. இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஷகிப் ஆவார். 

(With AFP inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இந்தியாவை பங்களாதேஷ் அணி வீழ்த்தியது
  • பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரான ஷகிப், டாப் பார்ம்மில் உள்ளார்.
  • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார் ஷகிப்
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக் கோப்பை 2019: ’வாழ்வா, சாவா’ போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வங்கதேசம்! #Preview
உலகக் கோப்பை 2019: ’வாழ்வா, சாவா’ போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வங்கதேசம்! #Preview
'இந்தியாவை வீழ்த்தும் திறன் எங்களுக்கு உண்டு!'- சீண்டும் ஷகிப்
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது #LiveScore
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது #LiveScore
5 விக்கெட்.. 46 ரன்கள்... மேற்கிந்திய தீவுகளை சிதறடித்த ஷகிப் அல் ஹசன்
5 விக்கெட்.. 46 ரன்கள்... மேற்கிந்திய தீவுகளை சிதறடித்த ஷகிப் அல் ஹசன்
Advertisement