
2019 உலகக்கோப்பை தொடரில் அதிகம் விமர்சிக்கப்படும் அணி பாகிஸ்தான் ஆகும். முதல் ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது பாகிஸ்தான் அணி.
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பாகிஸ்தான். இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள், சற்றே பருமனான தோற்றம் கொண்ட பாகிஸ்தான் அணியின் கேப்டனான சர்ப்ராஸ் அகமதை கடுமையாக கிண்டல் செய்தனர்.
இந்நிலையில், வீரர்களை நோக்கி ரசிகர்கள் தகாத வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் என பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் உட்பட பலர் கேட்டு கொண்டனர்.
தென் ஆப்ரிக்கா எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. இந்த வெற்றிக்கு பின், ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார் சர்ப்ராஸ் அகமது. இதனால் பாகிஸ்தான் மீது ரசிகர்களுக்கு இருந்த கோபம் சற்றே தணிந்துள்ளது.
பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டியில் ரசிகர் ஒருவர் ‘எங்களை மன்னித்துவிடுங்கள் சர்ப்ராஸ்' என பேனர் வைத்திருந்தார். இது வைரலாக பரவி வருகிறது.
Scenes at @HomeOfCricket #CWC19 #WeHaveWeWill #SarfarazAhmed pic.twitter.com/2I8OWR5o4l
— Pakistan Cricket (@TheRealPCB) June 23, 2019
@SarfarazA_54 congratulations sarfaraz bhai .we are sorry .
— Zeem Peerzada (@TheReaMujnabeen) June 24, 2019
Soryy sarfaraz.. we are sorry.. #SarfarazAhmed
— Fatima (@Fatima85081478) June 24, 2019
Sarfaraz ! We are sorry ! @SarfarazA_54 #PAKvSA pic.twitter.com/Ha7suApGz6
— Musswair Ahmed (@MusswairA) June 23, 2019
That's like a true Gentleman !
— Hidayat Khan (@IamHidayatKhan) June 23, 2019
Sarfaraz we are Sorry!@SarfarazA_54 #WeHaveWeWill pic.twitter.com/NIl56AjlvR
Sarfaraz Bhai we are with you
— Muhammad Amjad Sohail (@Muhamma26387581) June 22, 2019
I am sorry to say that It was such a shameful act performed from our side ... These men are a pure reflection of their families ... What they learn & what they do and they implement such kind of behaviours in practical life.#weStandwithSarfaraz
சர்ப்ராஸ் அகமது உடல் அமைப்பையும் சோயப் மாலிக் – சானியா மிர்ஸா ஜோடியாக சுற்றியதையும் கடுமையாக விமர்ச்சித்தனர் பாகிஸ்தான் அணி ரசிகர்கள்.
6 போட்டியில் 2 வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இனி நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளை எதிர் கொள்ள உள்ளது.