“அற்புதங்களுக்கு வாய்ப்பிருக்கு..!”- அரையிறுதிக் கனவை கைவிடாத பாக். கேப்டன்

Updated: 05 July 2019 10:54 IST

தற்போது அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களில் இருக்கின்றன.

Pakistan Will Try To Beat Bangladesh By Required Margin, Says Sarfaraz Ahmed
பாகிஸ்தான் அணி கடந்த 3 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளை வீழ்த்தி கெத்து காட்டியது © AFP

உலகக் கோப்பை 2019 தொடரில் பாகிஸ்தானுக்கு இன்னும் மீதம் இருப்பது ஒரேயொரு லீக் போட்டிதான். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் கூட, அந்த அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும் என்று சொல்லிவிட முடியாது. 

தற்போது அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களில் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 9 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 11 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்த்து களமிறங்கப் போகிறது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெல்லும் பட்சத்தில் அந்த அணிக்கு, மொத்தமாக 11 புள்ளிகள் கிடைக்கும். அப்படி இருந்து நெட் ரன் ரேட்டில் நியூசிலாந்து முன்னிலையில் இருப்பதால், அந்த அணி அரையிறுதிக்குள் நுழையும். 

பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெற:

வங்கதேசப் போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து, 350 ரன்கள் எடுத்து 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 

இல்லையென்றால், 400 ரன்கள் எடுத்து 316 வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 

முதலில் பவுலிங் செய்தால், பாகிஸ்தான், அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும்.

இப்படி பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைய, அசாத்தியமான விஷயங்கள் குறுக்கே நிற்கின்றன. இருப்பினும் நம்பிக்கையை இழக்காத பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபரஸ் அகமது, “வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவோம். அரையிறுதிக்குத் தகுதி பெறுவோமா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. தர்கத்தையும் நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். இறைவன் மனது வைத்தால், அற்புதங்களுக்கு வாய்ப்பிருக்கிறது” என்று பேசினார். 

அவர் தொடர்ந்து, “உலகக் கோப்பைத் தொடரில் பொதுவாக 280 முதல் 300 ரன்கள்தான் அடிக்கப்பட்டு வருகிறது. இங்கிருக்கும் பிட்சுகள் பேட்டிங்கிற்கு ஏதுவாக இல்லை. முதலில் நாங்கள் வங்கதேசப் போட்டியில் வெற்றிபெறத்தான் பார்க்க வேண்டும்” என்று விளக்கினார். 

பாகிஸ்தான் அணி கடந்த 3 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளை வீழ்த்தி கெத்து காட்டியது. ஆனால் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக களம் கண்ட பாகிஸ்தான் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. அந்த தோல்விதான் தற்போது பாகிஸ்தானுக்குத் தடையாக இருக்கிறது. 
 

(AFP தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • பாகிஸ்தான், அரையிறுதிக்குள் நுழைவது மிகவும் கடினமான ஒன்று
  • நாங்கள் வங்கதேசப் போட்டியில் சிறப்பாக விளையாடும், சர்ஃபரஸ்
  • தொடரில் அதிக ரன்கள் அடிப்பது கடினமாக உள்ளது, சர்ஃபரஸ்
தொடர்புடைய கட்டுரைகள்
"வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை" - பாகிஸ்தான் பயிற்சியாளரின் டயட் ப்ளான்!
"வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை" - பாகிஸ்தான் பயிற்சியாளரின் டயட் ப்ளான்!
இலங்கையுடனான தொடருக்கு இடமாற்றத்தை மறுத்துள்ளது பாகிஸ்தான்!
இலங்கையுடனான தொடருக்கு இடமாற்றத்தை மறுத்துள்ளது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!
"வீரர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்" - இலங்கை கிரிக்கெட் வாரியம்!
"வீரர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்" - இலங்கை கிரிக்கெட் வாரியம்!
"இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்லாததற்கு இந்தியா காரணமில்லை" - விளையாட்டுத்துறை அமைச்சர்!
"இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்லாததற்கு இந்தியா காரணமில்லை" - விளையாட்டுத்துறை அமைச்சர்!
Advertisement