“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!

Updated: 19 June 2019 11:48 IST

தற்போது நடந்து வரும் உலகக் கோப்பைத் தொடரில் ரோகித், நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

Sachin Tendulkar
இந்த உலகக் கோப்பையில் இதுவரை 3 போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. © AFP

இந்தியாவின் மிகவும் ஸ்டைலிஷான பேட்ஸ்மேன் என்று புகழப்படுபவர் ரோகித் ஷர்மா. தற்போது நடந்து வரும் உலகக் கோப்பைத் தொடரில் ரோகித், நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதுவரை அவர் உலகக் கோப்பைத் தொடரில், 36 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஆனால், இந்த அனைத்து ஷாட்களிலும் ஒன்று மட்டும் பலரின் கவனத்தை ஈர்த்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஹசன் அலி வீசிய பந்தை, பேக்வர்டு பாயின்ட் பகுதியில் சிக்ஸாக மாற்றியதுதான் பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த ஷாட்-ஐப் பலர், சச்சின் டெண்டுல்கர், 2003 உலகக் கோப்பைப் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த ஷாட் உடன் ஒப்பிட்டனர். 

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி கூட, இருவர் அடித்த ஷாட்களையும் வீடியோவாக எடிட் செய்து ட்வீட்டியது. வீடியோவுடன் நிறுத்திக் கொள்ளாமல் ஐசிசி, ‘யார் இந்த ஷாட்-ஐ மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். சச்சினா, ரோகித்தா?' என்று கேட்டது. 

இந்த ட்வீட்டைப் பகிர்ந்த சச்சின், “நாங்கள் இருவரும் இந்தியாவில் இருந்துதான் வருகிறோம். இன்னும் சொல்லப் போனால் இருவரும் மும்பை பசங்க. தலை விழுந்தால் நான் ஜெயித்தது மாதிரி. பூ விழுந்தால் நீங்கள் தோற்றது போல” என்று கிண்டல் செய்யும் விதத்தில் கருத்திட்டிருந்தார். 

இரண்டு போட்டிகளிலும் இந்தியாதான் வெற்றிவாகை சூடியது. ரோகித், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 113 பந்துகளுக்கு 140 ரன்கள் குவித்தார். அவரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா, முதல் இன்னிங்ஸில் மிகப் பெரிய ஸ்கோரை போஸ்ட் செய்தது. 

இந்தியாவின் ஸ்கோரை சேஸ் செய்த பாகிஸ்தான், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் டி/எல் முறைப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த உலகக் கோப்பையில் இதுவரை 3 போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் ரோகித், 159.50 சராசரியில் 319 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் ஒரு அரை சதமும் அடித்துள்ளார். 


 

Comments
ஹைலைட்ஸ்
  • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித், சிக்ஸ் அடித்தார்
  • 2003 உலக கோப்பையில் பாக்.,க்கு எதிரான போட்டியில் சச்சின்,சிக்ஸ் அடித்தார்
  • இந்த இரண்டு சிக்ஸர்களும் தற்போது ஒப்பிடப்பட்டு வருகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
யுஸ்வேந்திர சாஹலின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
யுஸ்வேந்திர சாஹலின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
" இருவரில் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டும்" - கோலியுடனான பார்ட்னர்ஷிப் பற்றி ரோஹித்
" இருவரில் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டும்" - கோலியுடனான பார்ட்னர்ஷிப் பற்றி ரோஹித்
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
Advertisement