‘ஒரே கல்லில் ரெண்டு மாங்கா’- சச்சினின் இரு சாதனைகளை முறியடிப்பாரா ‘ஹிட்மேன்’ ரோகித்..?

Updated: 08 July 2019 10:50 IST

இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Rohit Sharma On The Brink Of Breaking Two Sachin Tendulkar World Cup Records
சச்சின், உலகக் கோப்பைப் போட்டிகளில் 6 சதங்கள் அடிக்க, 44 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டார் © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா, 2019 உலகக் கோப்பையில் ‘மரண மாஸ்' பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். இதுவரை உலகக் கோப்பையில் 8 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித், 92.42 சராசரியில் 647 ரன்கள் குவித்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் அவர் 5 சதங்களை விளாசியுள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் மொத்தமாக 6 சதங்களை ரோகித் விளாசியுள்ளார். 

இது மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், தன் வசம் வைத்துள்ள சாதனையாகும். இன்னும் ஒரேயொரு சதம் விளாசினால், சச்சினின் சாதனையை ரோகித் முறியடிப்பார். அது மட்டுமல்ல உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்ததும் சச்சின்தான். 2003 உலகக் கோப்பைத் தொடரில் சச்சின், 673 ரன்கள் அடித்தார். இன்னும் 27 ரன்கள் மட்டும் அடித்தால், சச்சினின் இந்த சாதனையையும் ரோகித் முறியடிப்பார். 

சச்சின், உலகக் கோப்பைப் போட்டிகளில் 6 சதங்கள் அடிக்க, 44 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டார். ஆனால், ரோகித் ஷர்மாவோ வெறும் 16 போட்டிகளில் 6 சதங்களை விளாசியுள்ளார். மேலும் ஒரே உலகக் கோப்பைத் தொடரில் 600 ரன்கள் அடித்த 4வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ரோகித். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், மேத்யூ ஹைடன் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் மட்டும்தான் அந்தச் சாதனையைப் புரிந்திருந்தனர். 

2019 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா தனது கடைசி லீக் போட்டியை தென் ஆப்ரிக்காவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர், சதம் அடித்து, உலகக் கோப்பையில் 600 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்தார். ரோகித்தைத் தொடர்ந்து, வார்னரும் 600 ரன்களுக்கு மேல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை ஓல்டு ட்ரஃபோர்டில் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணியானது, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையோ, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவையோ எதிர்கொள்ளும்.

(AFP தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • அரையிறுதிப் போட்டியில் ரோகித், சச்சின் சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது
  • அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா
  • இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும்
தொடர்புடைய கட்டுரைகள்
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
400 சிக்ஸர்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார் ரோஹித் ஷர்மா!
400 சிக்ஸர்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார் ரோஹித் ஷர்மா!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
இந்தியா vs பங்களாதேஷ்: "சூப்பர் ஹீரோ"வாக மாறிய ரோஹித் ஷர்மா!
இந்தியா vs பங்களாதேஷ்: "சூப்பர் ஹீரோ"வாக மாறிய ரோஹித் ஷர்மா!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
Advertisement