“ரோகித்தான் பெஸ்ட்..!”- சொல்வது கிங் கோலி

Updated: 04 July 2019 11:11 IST

அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட இந்திய அணிக்கு லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மட்டும் பாக்கியுள்ளது.

Virat Kohli Says Rohit Sharma Is The Best One-Day Player In The World
அடுத்ததாக இந்தியா, இலங்கையை எதிர்த்து விளையாடும். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா, அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளது.  © AFP

உலகக் கோப்பை 2019-ன் அதிகபட்ச ரன் ஸ்கோர் செய்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா. இதுவரை 4 சதங்களை விளாசியுள்ள ரோகித், 544 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேசத்தை எதிர்த்துப் போட்டியிட்ட போதும், சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் ரோகித். வங்கதேசத்துக்கு எதிரான வெற்றிதான், இந்திய அணிக்கு அரையிறுதியில் இடத்தை உறுதி செய்தது. 

மரண மாஸ் பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ரோகித் ஷர்மா குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில், “ரோகித்தின் ஆட்டத்தை நான் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். அவர்தான் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். இந்தத் தொடரில் அவரது ஆட்டம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்துள்ளது. அவர்தான் பெஸ்ட்” என்றார். 

அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட இந்திய அணிக்கு லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மட்டும் பாக்கியுள்ளது. அடுத்ததாக இந்தியா, இலங்கையை எதிர்த்து விளையாடும். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா, அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளது. 

இந்தியா முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோற்க வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியாவும் தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணி முதலிடத்தோடு அரையிறுதிக்குள் நுழையும். 

முதலிடத்தில் இருக்கும் அணிக்கும் 4வது இடத்தில் இருக்கும் அணிக்கும் அரையிறுதிப் போட்டி நடைபெறும். 2 மற்றும் 3வது இடத்தில் இருக்கும் அணிகளுக்கு இடையில் இன்னொரு அரையிறுதிப் போட்டி நடக்கும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு மத்தியில்தான் இறுதிப் போட்டி நடைபெறும். 

Comments
ஹைலைட்ஸ்
  • இந்த உலகக் கோப்பையில் ரோகித், 4 சதங்களை விளாசியுள்ளார்
  • இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரோகித் பெற்றார்
  • இந்தியா, அடுத்ததாக இலங்கையை எதிர்த்து விளையாட உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Bangladesh: பிங்க் பால் டெஸ்ட் மூலம் தொடரை கைப்பற்றுமா இந்தியா!
India vs Bangladesh: பிங்க் பால் டெஸ்ட் மூலம் தொடரை கைப்பற்றுமா இந்தியா!
இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் ஒரு "முக்கிய நிகழ்வு" - விராட் கோலி!
இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் ஒரு "முக்கிய நிகழ்வு" - விராட் கோலி!
'மை பார்ட்னர் இன் கிரைம்' - கோலியின் அந்த பார்ட்னர் யார்?
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
Advertisement