காயத்தால் அவதிப்படும் இந்தியா; அணியில் இடம் பிடிப்பாரா பன்ட்- ஆப்கான் போட்டியில் என்ன நடக்கும்?

Updated: 22 June 2019 13:13 IST

ஆப்கானிஸ்தான் இன்னும் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாததால், அந்த அணிக்கு உள்ளேயே பல பிரச்னைகள் எழந்துள்ளன.

India vs Afghanistan: Rishabh Pant In Focus As Injury-Hit India Take On Last-Placed Afghanistan
தவான் மற்றும் ஷங்கர் போல, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. © AFP

இன்று உலகக் கோப்பைத் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரிஷப் பன்ட், ஆடும் 11 பேரில் இடம் பிடிப்பாரா என்பதை பல தரப்பினரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் இன்னும் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாததால், அந்த அணிக்கு உள்ளேயே பல பிரச்னைகள் எழந்துள்ளன. அந்த அணியின் பயிற்சியாளர் ஃபில் சிம்மோன்ஸ், அணியின் கேப்டன் குறித்து தேர்வுக் குழுவிடம் புகார் அளிக்க உள்ளதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

ஷிகர் தவானுக்கு பதில், விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட், 15 பேர் கொண்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தவானுக்கு பதில் தொடக்க வீரராக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய கே.எல்.ராகுல், அரைசதம் அடித்தார். இப்படிப்பட்ட சூழலில் பன்ட், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடும் 11 பேரில் இடம் பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கருக்கு, பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் ஆப்கானிஸ்தான் போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான். இதனால் அணியில் உள்ள தினேஷ் கார்த்திக் மற்றும் பன்ட் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

தவான் மற்றும் ஷங்கர் போல, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரும் ஆப்கான் போட்டியில் களமிறங்குவதில் சந்தேகம் நீடித்து வருகிறது. புவிக்கு பதில் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அப்படி களமிறக்கப்பட்டால் ஷமி, இந்த முறை உலகக் கோப்பையில் விளையாடப் போகும் முதல் போட்டி இதுவாகவே இருக்கும். 

Comments
ஹைலைட்ஸ்
  • புவிக்கு பதில் ஷமி களமிறங்க உள்ளார்
  • ரிஷப் பன்ட், அணியில் இடம் பிடிப்பாரா என்பதில் எதிர்பார்ப்பு உள்ளது
  • இந்தியா, இந்த உலகக் கோப்பையில் இனுனம் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
அம்பயரிடம் முறையிட்டதால் கோலிக்கு அபராதம்
அம்பயரிடம் முறையிட்டதால் கோலிக்கு அபராதம்
“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
World Cup 2019: ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!
World Cup 2019: ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!
“உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால்…”- மனம் திறந்த ரிஷப் பன்ட்!

Advertisement