“பாண்டியாவுக்கு முன்னர் பன்ட் இறங்கியது ஏன் தெரியுமா?”- ரோகித் சொல்லும் காரணம்!

Updated: 01 July 2019 10:54 IST

பாண்டியாவுக்கு முன்னர் பன்ட், நேற்றைய போட்டியில் களமிறக்கப்பட்டது குறித்து இந்திய துணை கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் கேட்கப்பட்டது

India vs England: Rishabh Pant At No.4: Rohit Sharma Sees The Funny Side. Watch
தனது முதல் போட்டியிலேயே பன்ட், 29 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்து அசத்தினார் © Twitter

உலகக் கோப்பை 2019-ன் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து - இந்திய கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை அடைய இந்தியா, கடைசி வரை போராடியும் 31 ரன்களில் தோல்வியடைந்தது. 

சேசிங்கின் போது, இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி பெவிலியன் திரும்பியவுடன், ஃபார்மில் இருக்கும் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதில் உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியினை ஆடும் ரிஷப்-பன்ட் களமிறக்கப்பட்டார். 
 

ரோகித் சொன்ன பதிலை இங்கே பாருங்கள்:

தனது முதல் போட்டியிலேயே பன்ட், 29 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்து அசத்தினார். முன்னதாக தொடக்க வீரர் ஷிகர் தவானுக்குக் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் தொடரிலிருந்து விலகினார். தவானுக்கு பதிலாக பன்ட், 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார். பன்ட், அணியில் சேர்க்கப்பட்டபோதும், விஜய் ஷங்கருக்கே தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய ஷங்கர், எதிர்பார்த்த வகையில் விளையாட காரணத்தால், ஆடும் 11 பேரிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் பன்ட், களமிறக்கப்பட்டார். 

பாண்டியாவுக்கு முன்னர் பன்ட், நேற்றைய போட்டியில் களமிறக்கப்பட்டது குறித்து இந்திய துணை கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “பன்ட், பாண்டியாவுக்கு முன்னர் களமிறங்கியது எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. நீங்கள் எல்லோரும் ரிஷப் பன்ட் விளையாட வேண்டும் என்றுதானே நினைத்தீர்கள். இந்தியாவில் இருந்து இங்கு வரை அப்படித்தானே சொன்னீர்கள். அதான் அவர் 4வது இடத்தில் களமிறங்கினார்” என்று பதிலளித்தார். 

Comments
ஹைலைட்ஸ்
  • இங்கிலாந்து போட்டியில் 4வது இடத்தில் களமிறக்கப்பட்டார் பன்ட்
  • இது குறித்து ரோகித், பதில் அளித்துள்ளார்
  • விஜய் ஷங்கருக்கு பதில்தான் ரிஷப் பன்ட், அணியில் சேர்க்கப்பட்டார்
தொடர்புடைய கட்டுரைகள்
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"பன்ட்டிடம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்" - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்
"பன்ட்டிடம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்" - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்
"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!
"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!
"பன்ட் இப்படி விளையாடினால், அதற்கான எதிர்வினையை சந்திப்பார்" - ரவி சாஸ்திரி!
"பன்ட் இப்படி விளையாடினால், அதற்கான எதிர்வினையை சந்திப்பார்" - ரவி சாஸ்திரி!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
Advertisement