இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு பின்னர் ஓய்வு பெறுகிறார் கிறிஸ் கேல்!!

Updated: 26 June 2019 21:17 IST

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் தனது அணிக்காக 103 டெஸ்ட் மற்றும் 294 ஒருநாள் போட்களில் விளையாடியுள்ளார்.

Chris Gayle To Play Home Series Against India Before Retiring
கிறிஸ் கேலுக்கு தற்போது 39 வயது ஆகிறது. © AFP

வெஸ்ட் இண்டீசில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை அடுத்து அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கேல் ஓய்வு பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக கூறியிருந்தார். 

இந்த நிலையில் அவர் தனது முடிவை மாற்றியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேல், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை விளையாட விரும்புவதாகவும், இதன்பின்னர் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்போன் என்றும் தெரிவித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஊடக மேலாளர் பிலிப் ஸ்பூனர் கூறுகையில், இந்தியாவுக்கு எதிராக கேல் தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடரை விளையாடுவார் என்று தெரிவித்தார். 

உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் இந்தியா வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி விளையாடுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கேல் 103 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார். இதில் அவர் 7,215 ரன்களை எடுத்துள்ளார். 294 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கேல் 10,345 ரன்களை குவித்திருக்கிறார். 

ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடும் அதிரடி ஆட்டத்தை கேல் விளையாடுவார். இதனால் அவரது ரசிகர்கள் கேலை 'யூனிவர்ஸ் பாஸ்' என்று செல்லமாக அழைக்கின்றனர். 

Comments
ஹைலைட்ஸ்
  • Chris Gayle wishes to play a Test match against India after the World Cup
  • Gayle has previously announced that he will retire after the World Cup
  • Chris Gayle has played 103 Tests, 294 ODIs and 58 T20Is
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
Advertisement