‘மனமுடைந்தேன்..!’- ராயுடு வெளியேற்றத்துக்கு கண்ணீர் வடிக்கும் கவுதம் கம்பீர்

Updated: 17 April 2019 12:06 IST

இந்தியா சார்பில் நான்காவது களமிறங்கும் வீரர் யார் என்ற கேள்வி, உலகக் கோப்பை அணித் தேர்வில் மையப் புள்ளியாக இருந்தது.

Ambati Rayudu
"48 பேட்டிங் சராசரி வைத்திருக்கும் ஒருவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது கஷ்டமாக இருக்கிறது" © AFP

எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணி, இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அம்பத்தி ராயுடு கண்டிப்பாக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை. இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், இன்னாள் பாஜக உறுப்பினருமான கவுதம் கம்பீர், ‘ராயுடு உலகக் கோப்பை இந்திய அணியில் சேர்க்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. ஒருநாள் போட்டிகளில் 48 பேட்டிங் சராசரி வைத்திருக்கும் ஒருவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது கஷ்டமாக இருக்கிறது. இந்த முடிவால் நான் மனமுடைந்தேன்' என்றார். 

அவர் மேலும், ‘ராயுடுவுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். 2007 ஆம் ஆண்டு, என்னையும் இதைப் போன்றுதான் அணியில் சேர்க்கவில்லை. அப்போது நான் எப்படி உணர்ந்தேன் என்பது எனக்குத் தெரியும். கிரிக்கெட்டை விரும்பும் எந்தவொரு குழந்தைக்கும் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என்பதுதான் உச்சபட்ச இலக்காக இருக்கும்' என்று விளக்கினார். 

2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் கவுதம் கம்பீர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் 2011 உலகக் கோப்பை அணியில் அவர் இருந்தார். அந்தத் தொடரில் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி 393 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். குறிப்பாக இறுதிப் போட்டியில் 97 ரன்கள் அடித்து, கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். தற்போது ராயுடுவுக்கும் அதைப் போன்ற ஒரு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கம்பீர் கருதுகிறார். 

இந்தியா சார்பில் நான்காவது களமிறங்கும் வீரர் யார் என்ற கேள்வி, உலகக் கோப்பை அணித் தேர்வில் மையப் புள்ளியாக இருந்தது. அந்த இடத்துக்கு ராயுடு மற்றும் விஜய் ஷங்கர் இடையில் கடும் போட்டி நிலவியது. ஆனால், கடைசியில் விஜய் ஷங்கரே அணியில் சேர்க்கப்பட்டார். விஜய் ஷங்கர் பவுலிங்கிலும் திறன்பட செயல்படுவார் என்பதே அவரின் தேர்வுக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய ஒருநாள் தொடரிலும், ராயுடு ஃபார்ம் இல்லாமல் திணறி வந்தார். இதைப் போன்ற காரணங்களால் ராயுடு அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்தியாவுக்காக ராயுடு, 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 47.05 சராசரியில் 1,694 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை அவர் 3 சதம் மற்றும் 10 அரை சதங்களை அடித்துள்ளார். 

(பிடிஐ தகவல்களை உள்ளடக்கிய செய்தி)

Comments
ஹைலைட்ஸ்
  • Rayudu was deemed as India's first-choice No.4 batsman a few months ago
  • BCCI announced the 15-man squad in Mumbai on Monday
  • Rayudu was left out of the Indian World Cup 2019 squad
தொடர்புடைய கட்டுரைகள்
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" -
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" - '3டி' ட்விட் குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத்!
அம்பத்தி ராயுடுவின் ஓய்விற்கு கோலியின் ரியாக்சன் என்ன தெரியுமா..?
அம்பத்தி ராயுடுவின் ஓய்விற்கு கோலியின் ரியாக்சன் என்ன தெரியுமா..?
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு!
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு!
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
தோனிக்கு காய்ச்சல்... கீப்பிங் செய்து ட்ரெண்டான 3டி ராயுடு!
தோனிக்கு காய்ச்சல்... கீப்பிங் செய்து ட்ரெண்டான 3டி ராயுடு!
Advertisement