“போதும், போதும் நிறுத்துங்க!”- தன்னை விமர்சித்த முன்னாள் வீரருக்கு ஜடேஜா கொடுத்த ‘பன்ச்’

Updated: 04 July 2019 10:58 IST

உலகக் கோப்பை 2019 தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றிருந்தாலும், ஆடும் 11 பேரில் அவர் இதுவரை சேர்க்கப்படவில்லை.

Ravindra Jadeja Blasts Sanjay Manjrekar Over Criticism
தொடரின் பல்வேறு நேரங்களில் ஜடேஜா, சப்ஸ்டிட்டியூட் ஃபீல்டராக வந்து, அட்டகாசமான கேட்சுகளை பிடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி வருகிறார் © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்சரேக்கர், இந்திய அணியில் விளையாடி வரும் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு தற்போது ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். 

முன்னதாக சஞ்சய் மஞ்சரேக்கர், “ஜடேஜா போன்ற அங்கொன்றும் இங்கொன்றும் திறன் கொண்ட கிரிக்கெட் வீரரின் மிகப் பெரிய ரசிகன் நான் அல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர் ஒரு நல்ல பவுலர். ஆனால், 50 ஓவர் கிரிக்கெட்டில் ஜடேஜா, அப்படியில்லை. அவருக்கு பதில் அணியில் ஒரு நல்ல பேட்ஸ்மேன் மற்றும் ஒரு நல்ல சுழற்பந்து வீச்சாளரை சேர்த்துக் கொள்வேன்” என்று கூறியிருந்தார். 

இதை ரவீந்திர ஜடேஜா, சாதரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா, “உங்களை விட நான் இரு மடங்கு அதிகமான போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்த மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பிதற்றலைப் போதுமான அளவு கேட்டுவிட்டேன்” என்று சொல்லி, மஞ்சரேக்கரை டேக் செய்துள்ளார். 

உலகக் கோப்பை 2019 தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றிருந்தாலும், ஆடும் 11 பேரில் அவர் இதுவரை சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் தொடரின் பல்வேறு நேரங்களில் ஜடேஜா, சப்ஸ்டிட்டியூட் ஃபீல்டராக வந்து, அட்டகாசமான கேட்சுகளை பிடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல்லின் கேட்ச்சைப் பிடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

Comments
ஹைலைட்ஸ்
  • மஞ்சரேக்கர், முன்னதாக ஜடேஜாவை விமர்சித்திருந்தார்
  • மஞ்சரேக்கரின் கருத்துக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார் ஜடேஜா
  • இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில் கூட ஜடேஜா ஆடவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
"ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது" - சவுரவ் கங்குலி
"ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது" - சவுரவ் கங்குலி
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
ஜடேஜாவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்... கொந்தளித்த விராட் கோலி!
ஜடேஜாவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்... கொந்தளித்த விராட் கோலி!
Advertisement