"இறுதிப்போட்டி டிக்கெட்டுகளில் லாபம் பார்க்காதீர்கள்" - ஜேம்ஸ் நீஸம் வேண்டுகோள்!

Updated: 13 July 2019 18:09 IST

நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஸம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அவர்களுடைய உலகக் கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே விற்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

New Zealand vs England Final: James Neesham Urges Indian Cricket Fans To Re-Sell Their World Cup 2019 Final Tickets
உலகக் கோப்பை இறுதிக்கு இந்திய ரசிகர்கள் பலரும் முன்கூட்டியே டிக்கெட்டுகள் வாங்கி வைத்து விட்டனர். © AFP

நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஸம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அவர்களுடைய உலகக் கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே விற்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். உலகக் கோப்பை இறுதிக்கு இந்திய ரசிகர்கள் பலரும் முன்கூட்டியே டிக்கெட்டுகள் வாங்கி வைத்து விட்டனர். ஆனால், இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேளியது. அதனால், ஜேம்ஸ் நீஸம், இந்திய ரசிகர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து நடந்துகொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

"அன்பான இந்திய கிரிக்கெட் ரசிகர்களே, உங்களுக்கு இறுதிப்போட்டியை காண விருப்பமில்லை என்றால், பொறுமையாக இருங்கள். உங்களுடைய டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே மறுவிற்பனை செய்யுங்கள். இதன் மூலம் லாபம் பார்க்க வேண்டுமென்பது உங்களின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், தீவிர ரசிகர்களின் நிலை அறிந்து செயல்படுங்கள்" என்று நீஸம் ட்விட் செய்தார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் நீஸம் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயலபட்டு வருகிறார். ஆனால், இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 12 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினார்.

நியூசிலந்து அணி, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. லீக் போட்டியில் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன, அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

2015ம் ஆண்டு நியூசிலாந்து அணி உலகக் கோப்பையில் ரன்னர்-அப் பட்டம் வென்றது. இரண்டு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. இரு அணிகளுக்கும் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!
"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!
"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!
"இறுதிப்போட்டி டிக்கெட்டுகளில் லாபம் பார்க்காதீர்கள்" - ஜேம்ஸ் நீஸம் வேண்டுகோள்!
"இறுதிப்போட்டி டிக்கெட்டுகளில் லாபம் பார்க்காதீர்கள்" - ஜேம்ஸ் நீஸம் வேண்டுகோள்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
Advertisement