பன்ட்டை விமர்சித்த கெவின் பீட்டர்சன்... பதிலளித்த யுவராஜ் சிங்!

Updated: 11 July 2019 20:05 IST

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான்காம் இடத்தில் பன்ட் ஆடியது மிகவும் பேசப்பட்டது. ஆனால், அவர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Rishabh Pant
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரிஷப் பன்ட். © AFP

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான்காம் இடத்தில் பன்ட் ஆடியது மிகவும் பேசப்பட்டது. ஆனால், அவர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இடது கை வீரரான பன்ட், சாண்ட்னர் வீசிய பந்தை அடித்து, க்ராண்தோமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பந்து தேர்வு செய்து குறித்தான பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்படும் இந்த நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் எதிர்மறையான கருத்தை தெரிவித்துள்ளார். "எத்தனை முறை அவர் (ரிஷப் பன்ட்) இதை செய்வார்? இதனால் தான் தொடக்கத்தில் அவர் இந்திய அணியில் இணைக்கப்படவில்லை! பரிதாபமாக உள்ளது" என்று கெவின் பீட்டர்சன் ட்விட் செய்திருந்தார்.

2011 உலகக் கோப்பையில் பங்கேற்ற யுவராஜ் சிங், பன்ட் ஆட்டத்துக்கு புதிது, அவர் அதிலிருந்து சிறந்த விஷயங்களை கற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

"அவர் வெறும் 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இதில் அவரி தவறு எதுவும் இல்லை. மேலும், இதில் பரிதாபப்படவும் ஒன்றும் இல்லை! இருப்பினும், அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை பகிரும் உரிமை உள்ளது" என்று பீட்டர்சன்னின் ட்விட்டுக்கு பதிலளித்தார்.

இரு வீரர்களுக்கு இடையில் விவாதம் எழுந்தது. பின்னர், பீட்டர்சன் "விரக்தியால் தான் விமர்சம் எழுகிறது" என்று தெரிவித்தார். கூடிய விரைவில் பன்ட் சரியான பந்துகளை தேர்ந்தெடுப்பதை கற்றுக்கொள்வார் என்று தான் நம்புவதாக கூறினார். பின்னர், பீட்டர்சன்னின் பதிலை ஏற்று கொண்டு விவாதத்தை முடித்தார் யுவராஜ் சிங்.

உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய பிறகு பேசிய விராட் கோலி, பன்ட் பந்து தேர்வு செய்வதில் வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவரே, "21 வயதான பன்ட் தன்னுடைய தவறிலிருந்தே கற்றுக்கொள்வார்" என்று தெரிவித்தார். ஹர்திக் பாண்ட்யாவுடன் பன்ட்டின் பார்ட்னர்ஷிப் பாராட்ட வேண்டியது என்றும் தெரிவித்தார்.

"நானும் முதலில் நிறைய தவறுகள் செய்துள்ளேன். அவரும் விரைவில் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வார். அவரின் தவறில் இருந்தே அவர் தன்னை மேம்படுத்திக்கொள்வார்" என்று விராட் கோலி கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
"கிரிக்கெட்டராக மட்டுமல்ல சிறந்த மனிதராகவும் மேம்பட வேண்டியுள்ளது" - ரிஷப் பன்ட்!
"கிரிக்கெட்டராக மட்டுமல்ல சிறந்த மனிதராகவும் மேம்பட வேண்டியுள்ளது" - ரிஷப் பன்ட்!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
"என்னை மிஸ் செய்கிறீர்களா?" - பிசிசிஐயிடம் கேட்ட யுவேந்திர சஹால்!
"என்னை மிஸ் செய்கிறீர்களா?" - பிசிசிஐயிடம் கேட்ட யுவேந்திர சஹால்!
Advertisement