“இருக்கு… ஆனா, இல்லை!”- பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளதா?

Updated: 04 July 2019 16:19 IST

பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைய, அசாத்தியமான விஷயங்கள் குறுக்கே நிற்கின்றன.

Pakistan vs Bangladesh, Preview: Pakistan Face Impossible Odds As Semi-Final Becomes A Distant Dream
தற்போது அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களில் இருக்கின்றன © AFP

உலகக் கோப்பை 2019 தொடரில் பாகிஸ்தானுக்கு இன்னும் மீதம் இருப்பது ஒரேயொரு லீக் போட்டிதான். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் கூட, அந்த அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும் என்று சொல்லிவிட முடியாது. 

பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல மற்ற அணிகளின் உதவி தேவைப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதேபோல நேற்று நடந்த நியூசிலாந்து - இங்கிலாந்து போட்டியில், நியூசிலாந்நு வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. தனது கடைசி சில லீக் போட்டிகளில் நியூசிலாந்து தோல்வியடைந்துள்ள போதும், நெட் ரன் ரேட்டில் முன்னிலை வகிக்கிறது.

தற்போது அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களில் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 9 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 11 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்த்து களமிறங்கப் போகிறது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெல்லும் பட்சத்தில் அந்த அணிக்கு, மொத்தமாக 11 புள்ளிகள் கிடைக்கும். அப்படி இருந்து நெட் ரன் ரேட்டில் நியூசிலாந்து முன்னிலையில் இருப்பதால், அந்த அணி அரையிறுதிக்குள் நுழையும். 

வங்கதேசப் போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து, 350 ரன்கள் எடுத்து 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால், 400 ரன்கள் எடுத்து 316 வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். முதலில் பவுலிங் செய்தால், அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும்.

இப்படி பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைய, அசாத்தியமான விஷயங்கள் குறுக்கே நிற்கின்றன. அந்த அணி கடந்த 3 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளை வீழ்த்தி கெத்து காட்டியது. ஆனால் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக களம் கண்ட பாகிஸ்தான் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. அந்த தோல்விதான் தற்போது பாகிஸ்தானுக்குத் தடையாக இருக்கிறது. 

அரையிறுதிக்குத் தகுதி பெறுகிறார்களோ இல்லையோ, வெள்ளிக் கிழமை நடக்க உள்ள லீக் போட்டியில் பாகிஸ்தான் நன்றாக விளையாடி தொடரை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 

வங்கதேசத்தைப் பொறுத்தவரை, அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிக்குப் பக்கத்தில் வந்து சென்றனர். குறிப்பாக அந்த அணியின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. வங்கதேசத்தின் ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், உலகக் கோப்பைத் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்து 10 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார். இந்தச் சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் இவர்தான். 

(PTI தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • கடந்த 3 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது
  • தனது கடைசி போட்டியை வங்கதேசத்துக்கு எதிராக விளையாடுகிறது பாக்.
  • வங்கதேசம் உலகக் கோப்பையில் ஆபாரமாக விளையாடி வருகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பதற்கு ஐபிஎல் தான் காரணம்" - அப்ரிடி!
"இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பதற்கு ஐபிஎல் தான் காரணம்" - அப்ரிடி!
"வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை" - பாகிஸ்தான் பயிற்சியாளரின் டயட் ப்ளான்!
"வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை" - பாகிஸ்தான் பயிற்சியாளரின் டயட் ப்ளான்!
இலங்கையுடனான தொடருக்கு இடமாற்றத்தை மறுத்துள்ளது பாகிஸ்தான்!
இலங்கையுடனான தொடருக்கு இடமாற்றத்தை மறுத்துள்ளது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!
"வீரர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்" - இலங்கை கிரிக்கெட் வாரியம்!
"வீரர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்" - இலங்கை கிரிக்கெட் வாரியம்!
Advertisement