“கறார் நடவடிக்கை!”- வீரர்களை எச்சரிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Updated: 20 June 2019 12:12 IST

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான், ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

Pakistan Cricket Board Announces "Robust Review" Amid World Cup Woes
கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போட்டியிலும் 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது பாகிஸ்தான். © AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான், ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போட்டியிலும் 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது பாகிஸ்தான். இதனால், அந்த அணி மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. 

இப்படிப்பட்ட சூழலில் நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பி.சி.பி, “பாகிஸ்தான் அணி குறித்தும் அதன் சப்போர்ட் குழு குறித்தும் கறாரான ஆய்வு செய்யப்படும். அதன் முடிவுகள் பிசிபி தலைவர் இஷான் மணியிடம் சமர்பிக்கப்படும்” என்று கூறியுள்ளது. 
 

இது குறித்து பி.சி.பி சார்பில் வெளியிடப்ப செய்திக் குறிப்பில், “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய விளையாட்டு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போது நடந்து வரும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் சரியில்லை என்றாலும், இனி வரும் போட்டிகளில் அவர்கள் திறமையாக விளையாடி நல்ல முறையில் தொடரை முடிப்பார்கள் என்று நம்புகிறோம்.

உலகக் கோப்பையைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் அணியின் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டு, அது குறித்த முடிவுகள் தலைவருக்கு சமர்பிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


(IANS தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பையில் திணறி வருகிறது பாகிஸ்தான் அணி
  • இந்தியாவுடன் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது
  • ஒரேயொரு போட்டியில்தான் பாகிஸ்தான் வெற்றியடைந்துள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
"என்னை சூதாட்டத்துக்கு அழைத்தார்" - குளோபல் டி20 லீக் போட்டி குறித்து பாகிஸ்தான் வீரர்!
"என்னை சூதாட்டத்துக்கு அழைத்தார்" - குளோபல் டி20 லீக் போட்டி குறித்து பாகிஸ்தான் வீரர்!
பாபர் அசாமின் புகழால் முடங்கிய சமர்செட் இணையதளம்!
பாபர் அசாமின் புகழால் முடங்கிய சமர்செட் இணையதளம்!
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
ஆகஸ்ட் 20ம் தேதி நடக்கவிருக்கும் ஹசன் அலி-ஷாமியா அர்சூ திருமணம்!
ஆகஸ்ட் 20ம் தேதி நடக்கவிருக்கும் ஹசன் அலி-ஷாமியா அர்சூ திருமணம்!
Advertisement