“ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால்…!”- வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாக். வெற்றி

Updated: 06 July 2019 10:53 IST

பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறவில்லை என்றாலும், கடைசி போட்டியில் வென்றது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Pakistan Beat Bangladesh By 94 Runs, End World Cup Campaign On High
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரீடி, 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். © AFP

2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், வங்கதேசத்தை எதிர்த்துத் தனது கடைசி லீக் போட்டியை விளையாடியது. இந்தப் போட்டியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றால் தவிர, அரையிறுதிக்குப் பாகிஸ்தான் தகுதி பெற முடியாத நிலை இருந்தது. வங்கதேசத்தை கிட்டத்தட்ட 300 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தால், அரையிறுதிக்குத் தகுதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அரையிறுதிக் கனவைத் தள்ளிவைத்துவிட்டு, போட்டியில் எப்படி வெற்றி பெறுவது என்பதில் கவனம் செலுத்தியது. 

அந்த அணியின் இமாம்-உல்-ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் 2வது விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்தனர். இமாம், சதம் அடித்தார். பாபர், 96 ரன்களின் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 315 ரன்கள் எடுத்தது. 

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், ஆரம்பத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இதனால் அந்த அணி, 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 221 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் மட்டும் அரைசதம் கடந்தார். அவர் உலகக் கோப்பைத் தொடரில் மொத்தமாக 606 ரன்களை எடுத்து அசத்தினார். 

உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் தொடர்ந்து பெறும் 4வது வெற்றி இது. இந்த வெற்றியை அடுத்து அணிகளுக்கான புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் 11 புள்ளிகளுடன் 5வது இடத்தில் நிலைகொண்டது பாகிஸ்தான். நியூசிலாந்துக்கு 11 புள்ளிகள்தான் இருந்தது. ஆனால் நெட் ரன் ரேட்டில் நியூசிலாந்து, பாகிஸ்தானை விட முன்னிலையில் இருப்பதால் அந்த அணி, 4வது இடத்தைப் பிடித்தது. அரையிறுதிக்கும் நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்டது. 

பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரீடி, 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 19 வயதேயாகும் அப்ரீடி, உலகக் கோப்பையில் இளம் வயதில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தவர் என்ற சாதனையைப் புரிந்தார். 

பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறவில்லை என்றாலும், கடைசி போட்டியில் வென்றது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Comments
ஹைலைட்ஸ்
  • பாகிஸ்தான், வங்கதேசத்தை 94 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது
  • ஷாஹீன் அப்ரீடி, 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்
  • வங்கதேசம், 7வது இடத்துடன் உலகக் கோப்பையை முடித்துக் கொண்டது
தொடர்புடைய கட்டுரைகள்
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
“ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால்…!”- வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாக். வெற்றி
“ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால்…!”- வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாக். வெற்றி
“அற்புதங்களுக்கு வாய்ப்பிருக்கு..!”- அரையிறுதிக் கனவை கைவிடாத பாக். கேப்டன்
“அற்புதங்களுக்கு வாய்ப்பிருக்கு..!”- அரையிறுதிக் கனவை கைவிடாத பாக். கேப்டன்
“இதை வச்சிகிட்டு எப்படிங்க அரையிறுதிக்குப் போறது!”- பாகிஸ்தானுக்கு சில யோசனைகள்
“இதை வச்சிகிட்டு எப்படிங்க அரையிறுதிக்குப் போறது!”- பாகிஸ்தானுக்கு சில யோசனைகள்
“இருக்கு… ஆனா, இல்லை!”- பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளதா?
“இருக்கு… ஆனா, இல்லை!”- பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளதா?
Advertisement