"இந்திய ரசிகர்கள் போன்றில்லை பாகிஸ்தான் ரசிகர்கள்" - சர்ஃபராஸ் அகமது

Updated: 12 June 2019 13:39 IST

பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக ஒரு வருடம் தடை செய்யப்பட்டிருந்தார் ஸ்மித். அணிக்கு திரும்பிய அவரை, இந்திய ரசிகர்கள், "ஏமாற்றுக்காரர்" என்று கூறி கலாட்டா செய்தனர்.

World Cup 2019: "Pakistan People Won
பாகிஸ்தான் அணி இன்று ஆஸ்திரேலிய அணியை டவுன்டனில் எதிர்கொள்கிறது. © AFP

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, பாகிஸ்தான் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்தை "ஏமாற்றுக்காரர்" என்று இந்திய ரசிகர்கள் கூறியது போன்று கூற மாட்டார்கள் என்றார். இந்திய-ஆஸ்திரேலியா இடையான போட்டியில் இந்த நிகழ்வு அரங்கேறியது. பாகிஸ்தான் அணி இன்று ஆஸ்திரேலிய அணியை டவுன்டனில் எதிர்கொள்கிறது. " பாகிஸ்தான் ரகிகர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். அவர்கள் கிரிக்கெட்டை விரும்புபவர்கள், கிரிக்கெட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், வீரர்கள் மீது அன்பு செலுத்துபவர்கள்" என்று சர் ஃபராஸ் கூறியுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக ஒரு வருடம் தடை செய்யப்பட்டிருந்தார் ஸ்மித். அணிக்கு திரும்பிய அவரை, இந்திய ரசிகர்கள், "ஏமாற்றுக்காரர்" என்று கூறி கலாட்டா செய்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், விராட் கோலி பேட் செய்துக்கொண்டிருந்த ஸ்மித்துக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர். ஆனால், விராட் கோலி ரசிகர்களிடம் அப்படி செய்யாதீர்கள் கைத்தட்டு உற்சாகப்படுத்துங்கள் என்று சைகை மூலம் தெரிவித்தார். விராட் கோலி மற்றும் ஸ்மித் இருவரும் எதிர்வரும் போது கை கொடுத்து கொண்டனர். இதற்கு முன்பு விராட் கோலி ஆஸ்திரேலிய வீரர்களுடன் களத்தில் மோதியுள்ளார். ஆனால், இப்போது அவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பாகிஸ்தான் இப்போது புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.

உலகக் கோப்பை தொடக்கத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் மோசமான முறையில் தோற்றது. 1992 சேம்பியன்ஸான பாகிஸ்தாஸ் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

ஆனால், இலங்கையுடனான அடுத்த போட்டி மழை காரணமாக தடைப்பட்டது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விரத்தியில் இருந்த பாகிஸ்தான் ரசிகரை கலாய்த்த நெட்டிசன்கள்.!
விரத்தியில் இருந்த பாகிஸ்தான் ரசிகரை கலாய்த்த நெட்டிசன்கள்.!
"தடைக்குபின் சர்வதேச போட்டிக்கு திரும்ப என் மனைவியே காரணம்" - வார்னர்
"தடைக்குபின் சர்வதேச போட்டிக்கு திரும்ப என் மனைவியே காரணம்" - வார்னர்
உலகக் கோப்பை 2019: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்!
உலகக் கோப்பை 2019: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்!
"இந்திய ரசிகர்கள் போன்றில்லை பாகிஸ்தான் ரசிகர்கள்" - சர்ஃபராஸ் அகமது
"இந்திய ரசிகர்கள் போன்றில்லை பாகிஸ்தான் ரசிகர்கள்" - சர்ஃபராஸ் அகமது
உலகக் கோப்பை 2019: ஆஸ்திரேலியாவை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்!
உலகக் கோப்பை 2019: ஆஸ்திரேலியாவை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்!
Advertisement