“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்

Updated: 25 June 2019 12:54 IST

2007 ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பையின்போது, பாகிஸ்தான் பயிற்சியாளராக இருந்த பாப் உல்மர், மரணமடைந்தார்.

Mickey Arthur Claims Pakistan
ஜூன் 16 அன்று, மான்செஸ்டரில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது © AFP

2019 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தானுக்க இடையில் நடந்த போட்டியில், இந்தியா வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் சந்தித்த தோல்வியால், ‘தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது' என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பகீர் கிளப்பம் தகவலை தெரிவித்துள்ளார். 

ஜூன் 16 அன்று, மான்செஸ்டரில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர்கள், அணிக்கு எதிராக கொந்தளித்தனர். பலர் வெளிப்படையாக அணியின் திறன் குறித்து கேள்வி எழுப்பினர். இந்த தோல்வியானது பாகிஸ்தான், அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் வகையில் அமைந்தது. அப்படி இருந்தும் ஞாயிற்றுக் கிழமை தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று, தங்களது அரையிறுதிக் கனவை பாகிஸ்தான் மெய்ப்புடன் வைத்துள்ளது. 

இருப்பினும், அந்த அணியை இந்தியாவுக்கு எதிரான தோல்வி வாட்டி வதைத்து வருகிறது. அது குறித்து பேசியுள்ள மிக்கி ஆர்தர், ‘கடந்த ஞாயிற்றுக் கிழமை, போட்டி முடிந்ததைத் தொடர்ந்து நான் தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன். உலகக் கோப்பையைப் பொறுத்தவரை எல்லாம் வேகமாக நடக்கும். ஓரிரு போட்டிகளில் நீங்கள் தோற்றால், உங்கள் மீது ஊடகங்கள் விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துவிடும். உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகும். அப்படிப்பட்ட அழுத்தத்தினால்தான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது. சில நேரங்களில் எல்லோருக்கும் அதைப் போன்ற எண்ணம் வந்து போகும்' என்று பேசினார்.

2007 ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பையின்போது, பாகிஸ்தான் பயிற்சியாளராக இருந்த பாப் உல்மர், மரணமடைந்தார். அந்த அணிக்கு அப்படியொரு கடந்த காலம் இருக்கும்போது, ஆர்தர் இப்படி பேசியுள்ளது சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான், தாங்கள் அடுத்த விளையாட உள்ள அனைத்துப் போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். அடுத்ததாக அவர்கள் பிர்மிங்ஹாமில் நியூசியாந்தை எதிர்கொள்ள இருக்கிறார்கள். 


 

Comments
ஹைலைட்ஸ்
  • ஜூன் 16 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தது
  • அந்தப் போட்டியில் பாக், 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தாவிடம் வீழ்ந்தது
  • தோல்வியையடுத்து, பாகிஸ்தான் ரசிகர்கள், அணியை விமர்சிக்க ஆரம்பித்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
'நல்லா விளையாடுங்க... நாங்க இருக்கிறோம்' - பாக். கேப்டனை தேற்றிய கிரிக்கெட் வாரிய தலைவர்!!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
Advertisement