"டிவில்லியர்ஸ் தேர்வு மறுப்புக்கு வருத்தமில்லை": தென்னாப்பிரிக்கா தேர்வுக் குழு

Updated: 07 June 2019 12:17 IST

தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் சூப்பர் ஹீரோ ஏபி டிவில்லியர்ஸ் கடந்த வருடம் மே மாதம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

AB De Villiers
தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை 2019ல் இங்கிலாந்து, பங்களாதேஷ், இந்தியாவுடன் தோல்வியை சந்தித்துள்ளது. © AFP

தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் சூப்பர் ஹீரோ ஏபி டிவில்லியர்ஸ் கடந்த வருடம் மே மாதம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்பு கோரியுள்ளார். கடைசி நேரத்தில் டிவில்லியர்ஸ் தன்னை அணுகியதாக தேர்வுக்குழு தலைவர் லிண்டா தெரிவித்தார். இதே கருத்தை கேப்டன் மற்றும் பயிற்சியாளரும் வற்புறுத்தியதாக கூறினார். டிவில்லியர்ஸ் இல்லாததால் உலகக் கோப்பை தொடரின் முதல் மூன்று ஆட்டங்களையும் தென்னாப்பிரிக்கா தோற்றுள்ளது.

லிண்டா, "டிவில்லியர்ஸை அணியில் சேர்ப்பது முறையான விஷயமாக இருக்காது. 2018ல் ஓய்வு வேண்டாம். உலகக் கோப்பையை மனதில் கொண்டு செயல்பட கூறினேன்" என்று கூறியுள்ளார். ஆனால் இதையெல்லாம் டிவில்லியர்ஸ் மறுத்ததாக கூறியுள்ளார்.

"தற்போது அணியில் டிவில்லியர்ஸ் சேர்க்கப்பட வேண்டும் என வீரர்களும், அவரும் கோரிக்கை வைப்பது சரியானதல்ல. அணி தேர்வுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது "என்றார். 

"ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த வருடம் சிறப்பான வெற்றியை பெற்ற பின்பு  டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்தது சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது" என்றார் லிண்டா.

"ஏப்ரல் 18 உலகக் கோப்பை அணி தேர்வின் போது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் டிவில்லியர்ஸ் சேர்ப்பு குறித்து கூறியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அணிப்தேர்வு கொள்கையின் படி அது சாத்தியமல்ல என்பதை புரிய வைத்தோம்" என்றார். 

டிவில்லியர்ஸ் 3 உலகக் கோப்பை தொடர்களில் ஆடியுள்ளார். 23 உலகக் கோப்பை ஆட்டங்களில் 1207 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சம் 162 நாட் அவுட்.

தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை 2019ல் இங்கிலாந்து, பங்களாதேஷ், இந்தியாவுடன் தோல்வியை சந்தித்துள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஏபி டிவில்லியர்ஸ் கடந்த மே மாதம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்
  • கடைசி நேரத்தில் அணியில் இணைக்க வேண்டுகோள் வைத்துள்ளார் டிவில்லியர்ஸ்
  • முதல் மூன்று ஆட்டங்களையும் தென்னாப்பிரிக்கா தோற்றுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
ஏபி டி வில்லியர்ஸுக்கு ஆதரவு தெரிவித்த விராட் கோலி, யுவராஜ் சிங்!
ஏபி டி வில்லியர்ஸுக்கு ஆதரவு தெரிவித்த விராட் கோலி, யுவராஜ் சிங்!
விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைத்த
விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைத்த 'மிஸ்டர் 360' ஏபிடி வில்லியர்ஸ்...!
உலகக் கோப்பையில் இணைய
உலகக் கோப்பையில் இணைய 'ஏபி டிவில்லியர்ஸ் - டு பிளசிஸ்' இடையே நடந்த போன் உரையாடல்!
"டிவில்லியர்ஸ் தேர்வு மறுப்புக்கு வருத்தமில்லை": தென்னாப்பிரிக்கா தேர்வுக் குழு
"டிவில்லியர்ஸ் தேர்வு மறுப்புக்கு வருத்தமில்லை": தென்னாப்பிரிக்கா தேர்வுக் குழு
''ஆர்சிபி ஃபேன்ஸ் எங்களை மன்னிச்சுடுங்க'' நெகிழ வைத்த கோலி, டிவில்லியர்ஸ்
Advertisement