ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!

Updated: 15 July 2019 18:46 IST

இரு இந்திய வீரர்கள் - ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா இருவரும் ஐசிசியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், விராட் கோலி தேர்வாகவில்லை.

Virat Kohli Misses Out In ICC
2019 உலகக் கோப்பையில் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. © AFP

உலகக் கோப்பையில் இந்திய அணியை அரையிறுதிப் போட்டி வரைக்கும் வழிநடத்திய கேப்டன் விராட் கோலி ஐசிசியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஐசிசி அணியின் விவரம் இன்று அதிகாராப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. விராட் கோலிக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஒரே ரன்கள் எடுத்திருந்தாலும், ஜேசன் ராய் 7 போட்டிகளில் ஆடி 63.29 சராசரி வைத்துள்ளார். ஆனால், விராட் கோலி 9 போட்டிகளில் ஆடி, 55.38 சராசரி மட்டுமே வைத்துள்ளார். சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது.

இரு இந்திய வீரர்கள் - ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா இருவரும் ஐசிசியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், உலகக் கோப்பை தொடரில் சிறந்த வீரர் என்ற பட்டம் பெற்றார். அவர் ஐசிசி அணியில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் வர்ணனையாளர்கள் இயன் பிஷப், இயன் ஸ்மித் மற்றும் இஷா குஹா, கிரிக்கெட் எழுத்தாளர் லாவரென்ஸ் பூத் மற்றும் ஐசிசி மேலாளர் கிரிக்கெட் ஜியோஃப் அலார்டைஸ் ஆகியோர் இணைந்து ஐசிசி ஆடும் லெவனை தேர்வு செய்தனர்.

ரோஹித் ஷர்மா மற்றும் ஜேசன் ராய் இருவரும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோஹித் ஷர்மா இந்தத் தொடரில் ஐந்து சதங்கள் அடித்து, 648 ரன்களுடன் தொடரின் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும், அடுத்தடுத்த வீரர்களாக ஜோ ரூட், ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரே ஆடும் லெவனில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பவுலிங் அணியில், மிட்செல் ஸ்டார்க், ஜோஃப்ரா ஆர்ச்சர், பெர்குசன் மற்றும் பும்ரா தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொடரில் 27 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர என்ற பெருமையை பெற்றார் ஸ்டார்க். நியூசிலாந்துக்கு எதிராக சூப்பர் ஓவர் வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்தத் தொடரில் 20 விக்கெட்டுகள் வீழ்த்துயுள்ளார். பும்ரா, 18 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

அணி விவரம்:

ஜேசன் ராய் (இங்கிலாந்து) - 443 ரன்கள், சராசரி 63.28

ரோஹித் ஷர்மா (இந்தியா) - 648 ரன்கள், சராசரி 81.00

கேன் வில்லியம்சன் (கேப்டன்) (நியூசிலாந்து) - 578 ரன்கள், சராசரி 82.57

ஜோ ரூட் (இங்கிலாந்து) - 556 ரன்கள், சராசரி 61.77

ஷாகிப் (பங்களாதேஷ்) - 606 ரன்கள், சராசரி 86.57, 11 விக்கெட், சராசரி 36.27

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 465 ரன்கள், சராசரி 66.42, 7 விக்கெட், சராசரி 35.14

அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்) (ஆஸ்திரேலியா) - 375 ரன்கள் சராசரி 62.50

மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 27 விக்கெட், சராசரி 18.59

ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) - 20 விக்கெட், சராசரி 23.05

லோக்கி பெர்குசன் (நியூசிலாந்து) - 1 விக்கெட், சராசரி 19.47

ஜஸ்ப்ரித் பும்ரா (இந்தியா) - 18 விக்கெட், சராசரி 20.61

Comments
ஹைலைட்ஸ்
  • விராட் கோலிக்கு பதிலாக இங்கிலாந்து ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • இருவரும் 2019 உலகக் கோப்பையில் 443 ரன்கள் குவித்துள்ளனர்.
  • ஐசிசி ஆடும் லெவனில் ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா இடம்பிடித்துள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
ஐ.சி.சி தலைவர் சஷாங்க் மனோகர் மூன்றாம் முறையாக தொடர மாட்டார்: தகவல்
ஐ.சி.சி தலைவர் சஷாங்க் மனோகர் மூன்றாம் முறையாக தொடர மாட்டார்: தகவல்
புக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி!
புக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
Advertisement