2019 உலகக் கோப்பை 15 பேர் அணியை அறிவித்தது நியூசிலாந்து!

Updated: 03 April 2019 14:41 IST

ஆறு முறை அரையிறுதிக்கும், சென்ற முறை இறுதிப்போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறிய அணி நியூசிலாந்து. தற்போது ஒருநாள் தரவரிசையில் 3வது இடத்தில் இங்கிலாந்து, இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

New Zealand Name 15-Man World Cup 2019 Squad
நியூசிலாந்து முதல் போட்டியில் ஜூன் 1ம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது. © AFP

நியூசிலாந்து முதல் அணியாக உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அணியில் ஆச்சர்யமான சேர்க்கை என்று பார்த்தால், டாம் ப்ளெண்டெல் எனும் கீப்பருக்கான தேர்வுதான். ஆறு முறை அரையிறுதிக்கும், சென்ற முறை இறுதிப்போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறிய அணி நியூசிலாந்து. தற்போது ஒருநாள் தரவரிசையில் 3வது இடத்தில் இங்கிலாந்து, இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

பயிற்சியாளர் கேரி ஸ்டேட் கூறும்போது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் ஜொலிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

''நாங்கள் சரியான 15 பேரை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நம்புகிறோம். அவர்கள் நியூசிலாந்துக்கு பெருமை சேர்ப்பார்கள்'' என்று கூறினார். 

வெலிங்டனை சேர்ந்த கீப்பர் ப்ளெண்டெல், டாம் லாதமுக்கு மாற்று கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லாதம் உடற்தகுதியோடு இருக்கும் போது இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்ற சூழல் உருவாகியுள்ளது. 

மிட்செல் சாண்ட்னர் நியூசிலாந்தின் பிரதான ஸ்பின்னராக இருப்பார். டோட் ஆஷ்லேவுக்கு பதிலாக இஷ் சோதிக்ல்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஸ்பின்னர்களை தேர்வு செய்வதில் தான் சிக்கல் இருந்ததாக ஸ்டெட் கூறினார். வேகப்பந்துவீச்சாளர்களில் போல்ட், சவுத்தி, பெர்குசன், ஹென்றி ஆகியோர் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஸம் மற்றும் காலின் டி க்ராண்தோம் ஆகியோர் அணிக்கு பங்களிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நிக்கோலஸ், முன்ரோ, கப்தில் ஆகியோர் டாப் ஆர்டரை வலு சேர்ப்பார்கள். வில்லியம்சன் , கப்தில் டெய்லர் சேர்த்து பார்த்தால் 526 போட்டிகளில் ஆடியுள்ளனர். இந்த அனுபவம் நியூசிலாந்துக்கு கைகொடுக்கும். 

நியூசிலாந்து முதல் போட்டியில் ஜூன் 1ம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து:

கேன் வில்லியம்சன் ( கேப்டன்), டாம் ப்ளென்டல், ட்ரெண்ட் போல்ட், காலின் டி க்ராண்தோம், பெர்குசன், கப்தில்,  மாட் ஹென்றி, டாம் லாதம், காலின் மன்றோ, ஜிம்மி நீஸம், ஹென்றி நிக்கோலஸ், சாண்டனர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர்.

Comments
ஹைலைட்ஸ்
  • நியூசிலாந்து உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது
  • மிட்செல் சாண்ட்னர் நியூசிலாந்தின் பிரதான ஸ்பின்னராக இருப்பார்
  • நியூசிலாந்து முதல் போட்டியில் ஜூன் 1ம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த மலிங்கா!
4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த மலிங்கா!
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
'உலகக் கோப்பை ஃபைனல் ஓவர்த்ரோ சர்ச்சை': மீண்டும் ஆய்வு; என்ன நடக்கும்?
பிறந்தநாளுக்கு கேக் கொண்டு வந்த இலங்கை ரசிகர்கள்... நெகிழ்ந்த வில்லியம்சன்!
பிறந்தநாளுக்கு கேக் கொண்டு வந்த இலங்கை ரசிகர்கள்... நெகிழ்ந்த வில்லியம்சன்!
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் பிரண்டன் மெக்கல்லம்!
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் பிரண்டன் மெக்கல்லம்!
Advertisement