“அடுத்த 2 போட்டிக்கு வாழ்த்துகள் தோனி”- சச்சின் ட்வீட்டால் பொங்கிய நியூசி பயிற்சியாளர்!

Updated: 08 July 2019 09:54 IST

நியூசிலாந்து அணி, உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், லீக் சுற்றில் தனது கடைசி 3 போட்டிகளிலும் தோல்விகண்டது.

New Zealand Coach Responds To Sachin Tendulkar
நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து, 4வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.  © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இன்னாள் விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி, நேற்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். சச்சினின் வாழ்த்துகளுக்கு வரிந்துக்கட்டிக் கொண்டு வந்துவிட்டார் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர். 

“மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பானதாக இருக்கட்டும். அடுத்த 2 போட்டிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று சச்சின், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ட்வீட்டியிருந்தார். 

இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை ஓல்டு ட்ரஃபோர்டில் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணியானது, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையோ, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவையோ எதிர்கொள்ளும். அரையிறுதிப் போட்டியில் இந்தியா, வென்றுவிடும் என்ற கணிப்புடன்தான் சச்சின், தோனிக்கு வாழ்த்து கூறியுள்ளார். 

சச்சினின் வாழ்த்து குறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீடிம் கேட்டபோது, “சச்சின், எங்கள் அணியில் அடுத்து யாருக்காவது பிறந்தநாள் வந்தால் கூட, அப்படி வாழ்த்து கூறுவார் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். 

நியூசிலாந்து அணி, உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், லீக் சுற்றில் தனது கடைசி 3 போட்டிகளிலும் தோல்விகண்டது. இன்னும் சொல்லப் போனால், அணிகளுக்கான புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் ஒரே புள்ளிகள்தான் எடுத்துள்ளன. ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து, 4வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. 

ஃபார்ம இல்லாமல் தவித்து வரும் தனது அணி குறித்து ஸ்டீட், “மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப்படப் போவதில்லை. இந்தியா, மிகவும் திறனுடைய அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், நியூசிலாந்தையும் யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம்” என்று எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்தார். 

(AFP தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி, நேற்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார்
  • இதையொட்டிதான் சச்சின், தோனிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்
  • உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும்
தொடர்புடைய கட்டுரைகள்
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
Advertisement