ரத்தம் சிந்தி விளையாடிய தோனி… இது ‘தல’-யின் வேற லெவல் டெடிகேஷன்!

Updated: 04 July 2019 10:36 IST

தோனி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 52 பந்துகளுக்கு 28 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

MS Dhoni
தோனி, தொடர்ந்து ரன் குவித்து வந்தாலும், அவரின் நிதானமான ஆட்டம் குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது © AFP

உலகக் கோப்பை 2019 தொடரில் தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தொடர்ந்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தோனி, தொடர்ந்து ரன் குவித்து வந்தாலும், அவரின் நிதானமான ஆட்டம் குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் தோனி ஆடிய விதம் சர்ச்சைக்கு உள்ளானது. இந்தியா, அந்தப் போட்டியில் 338 ரன்களை சேஸ் செய்தது. கடைசி 5 ஓவர்களில் 71 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனியும் கேதர் ஜாதவும் களத்தில் இருந்தனர். இருவரும் பந்துகளை அடிக்கத் திணறிய நிலையில், 39 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்களை மட்டுமே எடுத்தது. தோனி 31 பந்துகளில் 42 ரன்கள் அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அந்தப் போட்டியில் தோனிக்கு ஏற்பட்ட காயம் குறித்தோ, அவர் சிந்திய ரத்தம் குறித்தோ விமர்சனம் செய்த பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் கீப்பிங் செய்யும்போது, தனது வலது கட்டை விரலில் காயம் ஏற்படுத்திக் கொண்டார் தோனி. தொடர்ந்து பேட்டிங் செய்யும்போதும், அதே இடத்தில் பந்துபட்டது. அப்போது ரத்தம் வரவே, கை கிளவுஸை அவிழ்த்துவிட்டு கட்டைவிரலில் இருந்து ரத்தத்தை உறிந்துத் துப்பினார். இது சம்பந்தப்பட்ட படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் அந்தப் படத்தைப் பகிர்ந்து, தோனியின் மேன்மையைப் போற்றி வருகின்றனர். 

சில ரசிகர்களின் ரியாக்‌ஷன்:

தோனி குறித்தான சர்ச்சை பற்றி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், “ஒரேயொரு இன்னிங்ஸைத் தவிர தோனி, உலகக் கோப்பைத் தொடரில் மிக நன்றாகவே விளையாடினார். அணிக்கு என்ன தேவையோ அதை உணர்ந்து அவர் செயல்பட்டார். அவரின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது என்னை ஆச்சரியப்படுத்தியது” என்று கூறுகிறார்.

தோனி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 52 பந்துகளுக்கு 28 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவரின் அந்த இன்னிங்ஸ்தான் பலரை விமர்சனம் செய்ய வைத்தது. சச்சின் டெண்டுல்கர் கூட, தோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் செய்தார். இந்தியாவுக்கு உலகக் கோப்பையில் இன்னும் ஒரேயொரு லீக் போட்டிதான் மீதம் உள்ளது. வரும் சனிக்கிழமை இலங்கைக்கு எதிராக இந்தியா, தனது கடைசி லீக் போட்டியை விளையாட உள்ளது. 

(AFP தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • இங்கிலாந்து போட்டியில் தோனியின் ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது
  • அந்தப் போட்டியில் தோனியின் கட்டை விரலில் இருமுறை பந்துபட்டது
  • இலங்கைக்கு எதிராக இந்தியா, தனது கடைசி லீக் போட்டியை விளையாடும்
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
Advertisement