காவி-நீல நிறத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி; கோலி, தோனி கொடுத்த போஸ்!

Updated: 29 June 2019 11:13 IST

உலகக் கோப்பை அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா தற்போது 2வது இடத்தில் உள்ளது.

MS Dhoni, Virat Kohli
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறும். © Twitter

உலகக் கோப்பை 2019 தொடரில் இந்தியா, அடுத்ததாக இங்கிலாந்தை எதிர்த்து விளையாட உள்ளது. வரும் 30 ஆம் தேதி இந்தப் போட்டி நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, தனது பிரத்யேக நீல-காவி நிறம் கொண்ட புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது. இங்கிலாந்து, அணியும் நீல நிறத்திலேயே ஜெர்ஸி அணிந்திருக்கும் காரணத்தினால், இந்த புதிய ஜெர்ஸியுடன் இந்திய அணி களமிறங்க உள்ளதாம். 

‘அவே கிட்ஸ்' என்று சொல்லப்படும் இந்த வகை ஜெர்ஸிக்கு, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி ஒப்புதல் கொடுத்துள்ளது.

புதிய ஜெர்ஸியில் போஸ் கொடுக்கும் வீரர்கள்:

How many likes for this jersey ? #TeamIndia

A post shared by Team India (@indiancricketteam) on

“சமீபத்தில் ஒருநாள் போட்டிகளுக்கென்று பிரத்யேகமான டிசைன் கொண்ட ஜெர்ஸி வெளியிடப்பட்டது. அதில் வீரர்கள் விரைவாக நகருவதற்கு ஏதுவாக வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது. அதைப் போலவே இந்த ‘அவே கிட் ஜெர்ஸியில்' வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ப்ளாகெட் வடிவமைப்பு, ஃப்ளெக்ஸ் செஸ்ட், கார்மென்ட் கட் ஆங்கில்ஸ் போன்ற டிசைன்கள் வீரர்களை வெகு விரைவாக செயல்பட வைக்கும்” என்று ஜெர்ஸி குறித்து தெரிவிக்கப்படுகிறது.

உலகக் கோப்பை அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா தற்போது 2வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறும்.

இதுவரை உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற ஒரே அணி ஆஸ்திரேலியா மட்டும்தான். நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி இடத்துக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றன. 

Comments
ஹைலைட்ஸ்
  • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த ஜெர்ஸி அணியப்படும்
  • உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில், 2வது இடத்தில் இந்தியா உள்ளது
  • முதன்முறையாக இந்த புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
Advertisement