உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்!

Updated: 22 May 2019 13:35 IST

இந்தியா, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஜூன் 5ம் தேதி எதிர்கொள்கிறது.

"All Geared Up": Team India Leaves For World Cup 2019. See Pictures
2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. © Twitter

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2019 உலகக் கோப்பை தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து புறப்பட்டது. 2011 உலகக் கோப்பையில் அணியை வழிநடத்திய தோனி மற்றும் 14 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் சீருடையுடன் மும்பை விமான நிலையத்திலிருந்து நேற்று இங்கிலாந்து புறப்பட்டனர். இந்தியா, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஜூன் 5ம் தேதி எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷுடன் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மோதவுள்ளது. 

விமானத்தில் இங்கிலாந்து செல்லும் முன் இந்திய வீரர்களின் புகைப்படத்தை பிசிசிஐ ''ஜெட்..செட்.. டு கோ!" என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளது. 

தோனி, கோலி, சஹால், பாண்ட்யா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரோஹித் ஷர்மா, விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ், கே.எல்.ராகுல், ஷமி, தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரின் புகைப்படங்களை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா குல்திப் மற்றும் ஜாதவுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

"இங்கிலாந்து, நாங்கள் வருகிறோம்" என்று பாண்ட்யாவும், "உலகக் கோப்பைக்கு நாங்கள் தயார்" என்று பும்ராவும், "இங்கிலாந்து செல்கிறோம்" என்று சாஹலும் ட்விட் செய்துள்ளனர்.

இது முகவும் சவாலான உலகக் கோப்பை, எந்த அணியும், எந்த அணியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இரண்டு உலகக் கோப்பைகளில் ஆடியுள்ள கோலி முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவை வழிநடத்துகிறார்.

Comments
ஹைலைட்ஸ்
  • விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையில் ஆடவுள்ளது
  • 2011 உலகக் கோப்பையில் அணியை தோனி வழிநடத்தினார்
  • இந்தியா, தென்னாப்பிரிக்காவை ஜூன் 5ம் தேதி எதிர்கொள்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"ரன்களை திரும்ப பெறும்படி நான் சொல்லவில்லை" - ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து பென் ஸ்ட்ரோக்ஸ்!
"ரன்களை திரும்ப பெறும்படி நான் சொல்லவில்லை" - ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து பென் ஸ்ட்ரோக்ஸ்!
"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்
"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்
"கடும் வலியோடுதான் சில போட்டிகளில் ஆடினேன்"  - ஜோஃப்ரா ஆர்ச்சர்
"கடும் வலியோடுதான் சில போட்டிகளில் ஆடினேன்" - ஜோஃப்ரா ஆர்ச்சர்
சச்சின் பதிவிட்ட வினோதமான வீடியோ... நடுவர் தர்மசேனாவை கலாய்த்த நெட்டிசன்கள்!
சச்சின் பதிவிட்ட வினோதமான வீடியோ... நடுவர் தர்மசேனாவை கலாய்த்த நெட்டிசன்கள்!
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
Advertisement