"தோனியின் அனுபவம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உதவும்" - ரவி சாஸ்திரி

Updated: 15 May 2019 15:32 IST

உலகக் கோப்பைக்கு செல்லும் அணியில் எல்லா திறமைமிக்க வீரர்கள் இருப்பதாகவும், எந்த நேரத்தில் எந்த இடத்தில் ஆட வேண்டிய கட்டாயம் வந்தாலும் அவர்கள் ஆடுவார்கள் என்றும் ரவி சாஸ்த்ரி தெரிவித்தார்.

MS Dhoni, Virat Kohli Commitment To Each Other "Tremendous", Says Ravi Shastri Ahead Of World Cup
முன்னாள் இந்திய கேப்டன் தோனி, இந்தியா இரண்டாவது முறையாக 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல உதவியாக இருந்தார். © AFP

முன்னாள் இந்திய கேப்டன் தோனி, இந்தியா இரண்டாவது முறையாக 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல உதவியாக இருந்தார். இவரின் அனுபவம் இந்திய அணிக்கும், விராட் கோலிக்கும் மே 30ம் தேதி துவங்கும் உலகக் கோப்பையில் உதவியாக இருக்கும். தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனி மற்றும் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார். "அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் பொறுப்புணர்வு மிக பெரிய விஷயம்" என்றார். "தோனி மற்றும் கோலி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அதிகபடியான மரியாதை வைத்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். என்னுடைய வேலையின் தொடக்கத்தில் தோனி கேப்டனாக இருந்தார், இப்போது கோலி இருக்கிறார். அவர்களுக்கு ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பொறுப்புணர்வு அலாதியானது" என்றார் ரவி சாஸ்திரி.

தோனியின் சாதனைகள் குறித்து அணியில் இருக்கும் அனைவரும் அறிந்திருப்பதாகவும், வீரர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருப்பதாகவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

"விளையாட்டில் தோனி என்ன செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே. பேட்டிங்கின் போதும், விக்கெட் கீப்பிங் போதும் அவர் செய்வதை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

உலகக் கோப்பைக்கு செல்லும் அணியில் எல்லா திறமைமிக்க வீரர்கள் இருப்பதாகவும், எந்த நேரத்தில் எந்த இடத்தில் ஆட வேண்டிய கட்டாயம் வந்தாலும் அவர்கள் ஆடுவார்கள் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

உலகக் கோப்பை அணியில் நான்காம் இடத்தில் ஆட நிறைய போட்டி நிலவி வருகிறது. அம்பதி ராயுடுவுக்கு பதிலாக நான்காம் இடத்தில் விஜய் ஷர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று வடிவிலாக கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய விஜய் சங்கர், ஐபிஎல்லில் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. 15 போட்டிகளில் 244 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

"அணியில் அனைவரும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால், யார் வேண்டுமானாலும் நான்காம் இடத்தில் ஆடலாம். அது குறித்து எந்த கவலையும் இல்லை" என்றார்.

"இந்திய அணியில் எல்லோரும் ஒரே மாதிரியானவர்களாக இருக்க வேண்டாம். ஒவ்வொருவரும் வேறு விதமாக இருப்பதுதான் அணியின் சிறப்பம்சமாக இருக்க முடியும். விராட் கோலியிடம் இருக்கும் ஆர்வம், தோனியிடம் இருக்கும் அமைதி எல்லாமே அணிக்கு தேவை. ரோஹித் தவானை விட மாறுப்பட்டவராக இருக்கலாம், குல்தீப் ஹர்திக் பாண்ட்யா மாதிரி இல்லாமல் இருக்கலாம். இதெல்லாம் இருக்கும் போது அணியில் சுவாரஸ்யம் இருக்கும். இவை அனைத்துமே அணியில் இருக்க வேண்டிவை" என்றார்.

இந்தியா,  உலகக் கோப்பையில் முதல் போட்டியாக ஜீன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய அணிக்கும், விராட் கோலிக்கும் தோனியின் அனுபவம் உதவும்
  • ரவி சாஸ்திரி, தோனி மற்றும் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார்
  • முதல் போட்டியாக ஜீன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிர்கொள்கிறது இந்தியா
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
Advertisement