நம்ம தல தோனி இவ்வளவு நல்லவரா...!

Updated: 05 July 2019 15:52 IST

தோனி, பேட் லோகோவிற்கு ஒரு போட்டிக்கு 10-15 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்குவார்

MS Dhoni Using Different Bat Logos As Goodwill Gesture
தோனி மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன © AFP

2019 உலகக்கோப்பை தொடரானது தனது கடைசி கட்டத்தை அடைந்துள்ளது. லீக் சுற்றுகள் முடிவடையுள்ள நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த உலகக்கோப்பையில் இந்தியா அணியின் முன்னாள் கேப்டனான தோனி மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மெதுவாக விளையாடுகிறார், பழைய தோனியிடம் இருந்த ஏதேனும் ஒன்று மிஸ்ஸிங் என அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தோனி இந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற போகிறார் எனவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த உலகக்கோப்பையில் ஒவ்வொரு போட்டிக்கும் தனது பேட்டில் ஒவ்வொரு லோகோவுடன் விளையாடி வருகிறார் தோனி. இந்நிலையில் இதற்கான காரணத்தை தோனிக்கு நெருக்கமானவர்கள் ஐஏஎன்எஸ் க்கு தெரிவித்துள்ளனர்.

‘தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக தான் தோனி இவ்வாறு செய்கிறார். அதற்காக அவர் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை' என்கிறார்கள் தோனிக்கு நெருக்கமானவர்கள்.

பொதுவாக தோனி, பேட் லோகோவிற்கு ஒரு போட்டிக்கு 10-15 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தோனி ஒரு ரூபாய் கூட வாங்காமல் தன் கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த நிறுவனங்களின் லோகோவுடன் விளையாடுவது வரவேற்பை பெற்றுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஒவ்வொரு போட்டிக்கும் தனது பேட்டில் ஒவ்வொரு லோகோவுடன் விளையாடி வருகிறார்
  • நன்றியை தெரிவிக்கும் விதமாக தான் தோனி இவ்வாறு செய்கிறார்
  • தோனி மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டன
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
Advertisement