பந்துவீச்சாளருக்கு அறிவுரை வழங்கிய தோனி, ஃபீல்டிங்கை மாற்றிய வங்காள அணி!

Updated: 29 May 2019 13:51 IST

40வது ஓவரில் பந்து வீச ஓடி வந்த சபீர் ராஹ்மானை, இடையில் நிறுத்திய தோனி, சமந்தம் இல்லாத இடத்தில் நின்றுகொண்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி, அந்த வீரரின் இடத்தை மாற்ற சொன்னார்.

MS Dhoni Stops While Batting To Set The Field For Bangladesh - Watch
78 பந்துகளில் 113 ரன்கள் அடித்த தோனி © AFP

உலக கோப்பை போட்டிகள் நாளை, இங்கிலாந்தில் துவங்கவுள்ளது. அதற்குமுன், வார்ம்-அப் ஆட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன். அதில் நேற்று ஒரு போட்டியாக இந்தியா மற்றும் வங்காள அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 359 ரன்களை குவித்து போட்டியயில் வென்றது. இந்தியா சார்பில், முன்னாள் கேப்டன் தோனி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்து, எதிரணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். 

இவர், அட்டத்தின் 40வது ஓவரில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, எதிரணியின் சார்பில் சபீர் ராஹ்மான் பந்து வீச வந்தார்.பந்து வீச ஓடி வந்த அவரை, இடையில் நிறுத்திய தோனி, சமந்தம் இல்லாத இடத்தில் நின்றுகொண்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி, அந்த வீரரின் இடத்தை மாற்ற சொல்லி கேட்டார். அதை கவணித்த வங்காள அணியின் பந்துவீச்சாளர், தோனியின் அறிவுரையை கேட்டு, அந்த வீரரின் இடத்தையும் மாற்றினார். 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் இந்தியா, 359 ரன்கள் குவித்து 360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்தியாவின் துவக்க வீரர்கள் சரியான துவக்கம் தரவில்லை என்றாலும் கேப்டன் கோலி 47 ரன்கள் குவித்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் கலமிறங்கிய தோனியும், கே.எல்.ராகுலும் ஒரு வெற்றி கூட்டணியை அமைத்தனர். 5வது விக்கெட்டிற்கு 164 ரன்களை இந்த கூட்டணி குவித்தது. முதலில் சதம் அடித்த ராகுல் 99 பந்துகளில் 108 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின், ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி சதத்தை கடந்தார். இவர் 78 பந்துகளில் 113 ரன்களை விளாசினார். வங்காள அணி சார்பில் ருபெல் மற்றும் சகிப் அல்-ஹசன் தல 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர் கலமிறங்கிய, வங்காள அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் 9வது ஓவர் வரை 49 ரன்களை குவித்திருந்தனர். பின் பும்ராவின் யார்க்கரில் சிக்கிய அந்த அணி, அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை இழந்தது. முதலில் சர்கர் அட்டமிழக்க, பின் கழமிறங்கிய அல்-ஹசனும் அடுத்த பந்திலேயே வெளியேறினார். பின் கூட்டணியில் இணைந்த லிடன் தாஸ்(73) மற்றும் முஸ்பிகூர் ரஹ்மான்(90), 120 ரன்கள் சேர்த்து அணிக்கு ஒரு நம்பிக்கை அளித்தனர். பின் சஹல் மற்றும் குல்தீப்பின் சுழலில் சிக்கி வங்காள அணி 264 ரன்களுக்கு அனைந்து விக்கெட்களையும் இழந்தனர். இவர்கள் இருவரும் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
  • முதலில் பேட்டிங் செய்த இந்தியா 359 ரன்கள் குவித்தது
  • தோனி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். கே.எல்.ராகுலும் சதம் கடந்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
அரையிறுதியில் தோனி 7வது இடத்தில் ஆடியது ஏன்? - விளக்கம் கூறிய ரவி சாஸ்த்ரி
அரையிறுதியில் தோனி 7வது இடத்தில் ஆடியது ஏன்? - விளக்கம் கூறிய ரவி சாஸ்த்ரி
"நியூசிலாந்து அணியில் சேர தோனிக்கு தகுதியில்லை" - கேன் வில்லியம்சன்
"நியூசிலாந்து அணியில் சேர தோனிக்கு தகுதியில்லை" - கேன் வில்லியம்சன்
"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்
"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்
தோனி ரன் அவுட் குறித்து ஐசிசி ட்விட்; கடும் கோபத்தில் இந்திய ரசிகர்கள்!
தோனி ரன் அவுட் குறித்து ஐசிசி ட்விட்; கடும் கோபத்தில் இந்திய ரசிகர்கள்!
கனவைத் தகர்த்த தோனியின் ரன்-அவுட்; நடுவர்கள் மெத்தனத்தால் இந்தியாவுக்கு விழுந்த மரண அடி!
கனவைத் தகர்த்த தோனியின் ரன்-அவுட்; நடுவர்கள் மெத்தனத்தால் இந்தியாவுக்கு விழுந்த மரண அடி!
Advertisement