கனவைத் தகர்த்த தோனியின் ரன்-அவுட்; நடுவர்கள் மெத்தனத்தால் இந்தியாவுக்கு விழுந்த மரண அடி!

Updated: 11 July 2019 14:28 IST

பொதுவாக ரன் அவுட் ஆகாத தோனி, இந்த முறை எப்படி அவுட் ஆனார் என்ற கேள்வியால் நெட்டிசன்கள் தூக்கம் இழந்துள்ளனர்

MS Dhoni Run Out Sparks Debate On Twitter Over Legality Of Delivery
ஜடேஜா அவுட்டான பின்னரும், தோனி களத்தில் இருந்தார். எப்படியும் அணியை வெற்றி பெறச் செய்துவிடுவார் என்று நினைக்கப்பட்ட நேரத்தில், 48வது ஓவரில் தோனி ரன் அவுட் ஆனார். © AFP

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக உலகக் கோப்பை அரையிறுதியில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது. 

அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து, இந்தியாவுக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இதைத் தொடர்ந்து சேசிங்கை ஆரம்பித்த இந்தியா தொடக்கத்திலேயே டாப்-ஆர்டரை மொத்தமாக இழந்தது. மிடில் ஆர்டரில் இருந்த பாண்டியா மற்றும் பன்ட் பார்ட்னர்ஷிப் போட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதைத் தொடர்ந்து தோனி மற்றும் ஜடேஜா, 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை வெற்றிக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது. 

ஜடேஜா அவுட்டான பின்னரும், தோனி களத்தில் இருந்தார். எப்படியும் அணியை வெற்றி பெறச் செய்துவிடுவார் என்று நினைக்கப்பட்ட நேரத்தில், 48வது ஓவரில் தோனி ரன் அவுட் ஆனார். அத்துடன் 100 கோடி இந்தியர்களின் மனதில் இருந்த கனவு தகர்ந்தது. பொதுவாக ரன் அவுட் ஆகாத தோனி, இந்த முறை எப்படி அவுட் ஆனார் என்ற கேள்வியால் நெட்டிசன்கள் தூக்கம் இழந்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து சிலர், ரன் அவுட் குறித்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். 48வது ஓவரின் 3வது பந்தில்தான் தோனி அவுட் ஆனார். அந்த ஓவரைப் போட்டது ஃபெர்குசன். ஓவரின் 2வது பந்தை வீசிய பின்னர், ஃபீல்டிங் பொசிஷன் குறித்த ஒரு கிராஃபிக் படம் டிவியில் காட்டப்பப்பட்டது. அதில் பவுண்டரிக்கு அருகில் 6 பேர் நின்றிருந்தது தெளிவாக தெரிகிறது. பவுண்டரிக்கு அருகில் கடைசி 10 ஓவர்களின் போது 5 பேர்தான் நிற்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதை நடுவர்கள் சரியாக பார்த்து நோ-பால் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் மெத்தனத்தால் தோனி அவுட்டாகிவிட்டதாக நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர். 

இது குறித்து நெட்டிசன்களின் கொதிப்பை இங்கே பார்க்கலாம்.

நடுவர்கள் நோ-பால் கொடுத்திருந்தாலும், ரன்-அவுட்டில் மாற்றமிருந்திருக்காது. ஆனால் நோ-பால் என்று சிக்னல் செய்யப்பட்டிருந்தால், அதற்கு ஏற்றாற் போல அந்தப் பந்தை தோனி ஆடியிருப்பார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து பல நெட்டிசன்களும் காரசாரமாக கருத்துப் பதிவு செய்து வருகின்றனர். 

Comments
ஹைலைட்ஸ்
  • தோனியின் ரன்-அவுட்டுக்கு நடுவர்களைத் திட்டி வருகின்றனர் ரசிகர்கள்
  • அரையிறுதியில் இந்தியா, 221 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது
  • 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, தோல்வியைத் தழுவியது
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
Advertisement