“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி

Updated: 07 June 2019 13:30 IST

“கிரிக்கெட் வீரர்கள் வியாபாரம் சார்ந்து, மதம் சார்ந்து அல்லது ராணுவம் சார்ந்து எந்தவித லோகோவையும் பயன்படுத்தக் கூடாது"

MS Dhoni Not To Remove Insignia From Gloves, Have Sought ICC Approval, Says Committee of Administrators Chief
"தோனி எந்தவித விதிமுறையையும் இங்கு மீறவில்லை” © AFP

உலகக் கோப்பையில் இந்திய கிரிகெட் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்த்துத் தனது முதல் போட்டியை விளையாடியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் மாஸ் பெர்ஃபார்மன்ஸ் மட்டும் பேசு பொருளாக மாறவில்லை. விக்கெட் கீப்பர் தோனியின் கீப்பிங் கிளவுஸும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

தென்னாப்பிரிக்கப் போட்டியில் தோனி அணிந்திருந்த கீப்பிங் கிளவுஸில் ராணுவத்தின் முத்திரைப் போன்ற ஒன்று இருந்தது. இதைப் பல கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு, ட்விட்டரில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். பலரும் தோனியின் இந்த செயலுக்குப் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, தோனியின் இந்த செயலை ரசிக்கவில்லை. கிளவுஸில் இருக்கும் அந்த முத்திரை நீக்கப்பட வேண்டும் என்றும் கூறியுது. 

இந்த விவகாரம் சர்ச்சையனாதைத் தொடர்ந்து பிசிசிஐ அமைப்பின் வினோத் ராய், “தோனி, கிளவுஸில் வைத்திருக்கும் முத்திரை ராணுவத்தினுடையது அல்ல. மேலும், அந்த முத்திரையை பயன்படுத்த அவர் சார்பில் பிசிசிஐ முறைப்படி ஐசிசி-யிடம் அனுமதி வாங்கிவிட்டது” என்று விளக்கம் அளித்துள்ளார். 

அவர் மேலும், “கிரிக்கெட் வீரர்கள் வியாபாரம் சார்ந்து, மதம் சார்ந்து அல்லது ராணுவம் சார்ந்து எந்தவித லோகோவையும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரை அப்படி எதையும் சேர்ந்ததில்லை. ஆகையால் தோனி எந்தவித விதிமுறையையும் இங்கு மீறவில்லை” என்று விளக்கியுள்ளார். 

தோனி கிளவுஸில் இருப்பது ராணுவத்தின் முத்திரைதான் என்பதற்கு ஆதாரம் இல்லை. அது குறித்து அவரும் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.

தோனி, இந்திய துணை ராணுவப் படையில் கவுர லெஃப்டெனென்ட் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

(PTI தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • தோனியின் கிளவுஸ் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது
  • பலரும் தோனியின் செயலுக்குப் பாராட்டு தெரிவித்தனர்
  • ஐசிசி, தோனி பயன்படுத்திய முத்திரையை நீக்க சொல்லியது
தொடர்புடைய கட்டுரைகள்
"பதட்டமடையாமல் திறமைகளை நம்ப வேண்டும் என்று தோனி கற்றுகொடுத்தார்" - பிராவோ
"பதட்டமடையாமல் திறமைகளை நம்ப வேண்டும் என்று தோனி கற்றுகொடுத்தார்" - பிராவோ
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
Advertisement