'எம்.எஸ்.தோனி, இது வெறும் பெயரல்ல!' - தோனிக்கு தலை வணங்கும் ஐசிசி!

Updated: 06 July 2019 16:09 IST

தோனியின் இந்த பிறந்தநாளை கொண்டாடும் வகையில் "தோனி என்பது வெறும் பெயரல்ல, இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றிய பெயர்!;' என ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. 

"MS Dhoni, Not Just A Name": ICC Salutes Former India Captain Ahead Of Sri Lanka Clash
நாளை பிறந்தநாள் காணும் தோனி! © AFP

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்றால் முதலில் நினைவிற்கு வருபவர், தோனி-தான். ஐசிசி நடத்தும் மூன்று முக்கிய தொடர்களையும், இவர் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. கேப்டன் பதவியிலிருந்து விலகியிருந்தாலும், இன்னும் இந்திய அணிக்கான தன் பங்களிப்பை தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கிறார், தோனி. 37 வயதான இவர், நாளை(ஜூலை 7) தனது 38-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். தோனியின் இந்த பிறந்தநாளை கொண்டாடும் வகையில் "தோனி என்பது வெறும் பெயரல்ல, இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றிய பெயர்!;' என ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. 

ஐசிசி தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள பதிவில், "இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய பெயர், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளித்த ஒரு பெயர், மறுக்க முடியாத ஒரு பெயர் - எம்.எஸ்.தோனி, இது வெறும் பெயரல்ல!'' என குறிப்பிட்டுள்ளது. 

தோனி கிரிக்கெட்டில் செய்த சாதனைகள் பல. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை, ஐசிசி டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி என மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே வீரர் இவர்தான். இவரது தலைமையில், இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தரவரிசைகளில் முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக, மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். 

ஐசிசி வெளியிட்ட இந்த வீடியோவில், இந்திய கேப்டன் கோலி, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோர், தோனி எப்படி அவர்களின் கிரிக்கெட் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் எனபதை நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.

இந்த வீடியோவில் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், தோனியை 'மிஸ்டர். கூல்' என குறிப்பிட்டுள்ளார். மேலும், தோனிதான் அவருடைய இலட்சிய மனிதர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

'இந்த விளையாட்டின் ஒரு தலைசிறந்த வீரர், தனிச் சிறப்புடைய விக்கெட் கீப்பர்' என பென் ஸ்டோக்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய கிரிக்கெட்டில் ஒரு மிகச்சிறந்த கேப்டன் தோனி
  • இவர் தலைமையில் இந்திய அணி ஐசிசி நடத்தும் முக்கிய தொடர்களை வென்றுள்ளது
  • தோனி தனது 38வது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ளர்
தொடர்புடைய கட்டுரைகள்
தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?
தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?
"மீண்டும் குகைக்கு வந்த லெஜண்ட்" - தோனியுடன் புகைப்படம் பகிர்ந்த ரவி சாஸ்திரி
"மீண்டும் குகைக்கு வந்த லெஜண்ட்" - தோனியுடன் புகைப்படம் பகிர்ந்த ரவி சாஸ்திரி
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
Advertisement