“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

Updated: 24 June 2019 13:36 IST

பலர் மீம்ஸ்கள் மூலம் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள். 

India vs Afghanistan: MS Dhoni, Kedar Jadhav
ஆப்கான் போட்டியில் தோனி 52 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்தார். © AFP

உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா போராடி வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் பலரும் ஆப்கானிஸ்தானின் சாதுர்யமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், தங்களது விக்கெட்டுகளை சீக்கிரமே விட்டுக் கொடுத்து பெவிலியன் திரும்பினார்கள். ஒரு கட்டத்தில் தோனி மற்றும் கேதர் ஜாதவ் இடையில் பார்ட்டனர்ஷிப் உருவானது. இருவரும் 84 பந்துகளுக்கு 57 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இது முதல் இன்னிங்ஸின் கடைசி நேரத்தில் நடந்தது. இந்தியாவுக்கு அதிக ரன்கள் தேவைப்படும்போது, இருவரும் மிகப் பொறுமையாக விளையாடியதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்கள் உருவாக்கி கேலி செய்து வருகின்றனர். அந்த மீம்ஸ்கள் தற்போது இணைய வைரலாகி வருகின்றன. 

ஆப்கான் போட்டியில் தோனி 52 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்தார். ஜாதவ் 68 பந்துகளுக்கு 52 அடித்தார். 

இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன், “ரிஷப் பன்ட்க்கு பதில் கேதார் ஜாதவ் விளையாடினால், தொடர்ந்து மற்ற நாடுகள் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று கேலி செய்யும் விதத்தில் பதிவிட்டார். அவரது பதவிக்குப் பலரும் ஆதரவு தெரிவித்தனர். 

பலர் மீம்ஸ்கள் மூலம் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள். 
 
Comments
ஹைலைட்ஸ்
  • ஆப்கான் போட்டியில், தோனி - ஜாதவ் இணைந்து 57 பார்ட்னர்ஷிப் போட்டனர்
  • இருவரும் ஆக்ரோஷமாக விளையாட தவறிவிட்டனர்
  • ஆப்கான் போட்டியில் இந்தியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது
தொடர்புடைய கட்டுரைகள்
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
Advertisement