"தோனி கணினியை விட வேகமானவர்" - சோயிப் அக்தர்!

Updated: 07 June 2019 12:44 IST

தோனி கணினிகளைவிட வேகமானவர் என்று சோயிப் அக்தர் தனது யூட்யூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

MS Dhoni Is Faster Than A Computer, Says Shoaib Akhtar
தோனி கணினிகளைவிட வேகமானவர் என்று சோயிப் அக்தர் கூறியுள்ளார் © AFP

தோனி ஒரு அனுபவ வீரராக இந்திய அணிக்கு திகழ்கிறார் என்றும், இளம்வீரர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார். மேலும் அவர், தோனி கணினிகளைவிட வேகமானவர் என்று தனது யூட்யூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

"கணினி நாம் என்ன சொன்னாலும் கண் இமைக்கும் நேரத்தில் செய்து முடிக்கும். தோனி அதைவிட வேகமானவர்" என்றார்.

இந்தியா உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடியது. இந்த போட்டியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் தோனி 34 ரன்கள் சேர்த்தார். மேலும் ஒரு அபாரமான ஸ்டெம்பிங்கும் செய்தார்.

மேலும், அக்தர் இந்தியாவின் நான்காம் நிலை வீரர் யார் என்ற கேள்விக்கு ராகுல் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

"ராகுல் ஒரு சிறந்த வீரர்". ராகுல் கோலியை பிந்தொடர்வதாக தான் கருதுவதாகவும் அக்தர் கூறினார். மேலும், ராகுலுக்கு ஒரு அறிவுரையையும் கூறியுள்ளார். அதில் "நீங்கள் எப்போதெல்லாம் சிறப்பாக ஆடவில்லையோ உங்கள் கோபத்தை பயிற்சியில் காட்டுங்கள் அது உங்களை தரமுயர்த்தும்" என்றார்.

26 ரன்களை குவித்த ராகுல் ரோஹித்துடன் இணைந்து 85 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். 

ரோஹித் ஷர்மாவிப் சதத்தால்  6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. தோனியும் 34 ரன்கள் குவித்து தன் பங்களிப்பை அளித்தார்.

இந்தியா அடுத்த போட்டியில் ஜூன் 9ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
Advertisement