தோனியை விமர்சித்த சச்சின்… சச்சினை வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!

Updated: 25 June 2019 14:58 IST

இதுவரை 4 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள தோனி, ஒருநாள் போட்டிகளில் 50.18 சராசரியில் 10,500 ரன்களை எடுத்துள்ளார். 

MS Dhoni Fans Troll Sachin Tendulkar For His Remarks After Afghanistan Match
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தோனி, நல்ல ஃபார்மில் இல்லை. அவர் இதுவரை 28, 1, 27 மற்றும் 34 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் © AFP

மகேந்திர சிங் தோனி… பல கிரிக்கெட் ரசிகர்களின் மந்திரச் சொல் இது. இந்த மந்திரச் சொல்லை யார் கலங்கப்படுத்தினாலும் தோனி ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. தற்போது ‘மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர், தோனியின் ஆட்டம் குறித்து விமர்சித்துள்ளார். இதைப் பொறுத்துக் கொள்ளாத தோனி ரசிகர்கள், சச்சினை வறுத்தெடுத்துள்ளனர். 

2019 உலகக் கோப்பைத் தொடரில் சில நாட்களுக்கு முன்னர் இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா போராடி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், ரன் அடிக்கத் திணறினார்கள். தோனி, 52 பந்துகளுக்கு வெறும் 28 ரன்கள் மட்டுமே குவித்தார். இந்த பொறுமையான ஆட்டம் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது. 

இது குறித்து, ‘இந்தியா டுடே'-விடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், “ஆப்கானிஸ்தான் போட்டி கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. இன்னுமும் நம்மால் சிறப்பாக விளையாடியிருக்க முடியும். கேதார் ஜாதவ் மற்றும் தோனிக்கு இடையிலான பார்ட்னர்ஷிப்பில் மிகவும் பொறுமையாக ரன் ஸ்கோர் செய்யப்பட்டது. 34 ஓவர்கள் சுழற்பந்து வீச்சை விளையாடி வெறம் 119 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அங்கு ஒரு நேர்மறையான அணுகுமுறையே இல்லை” என்று பொங்கினார். 

சச்சினின் இந்த கமென்ட்-க்கு தோனி ரசிகர்கள் மீம்ஸ் உருவாக்கி கேலி செய்ய ஆரம்பித்தனர். சிலர் சச்சின் மற்றும் தோனியின் பயோ-பிக்களை கூட ஒப்பிட்டு கேலி செய்தனர். 

தோனி ரசிகர்களின் ட்வீட்களை இங்கே பார்க்கவும்:

இந்த உலகக் கோப்பைத் தொடரில் தோனி, நல்ல ஃபார்மில் இல்லை. அவர் இதுவரை 28, 1, 27 மற்றும் 34 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஆனால் அணிக்கான வியூகங்கள் வகுப்பதில் தோனி முன்னிலையில் இருக்கிறார். அவரின் அந்த பங்களிப்பு இந்திய அணிக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. 

இதுவரை 4 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள தோனி, ஒருநாள் போட்டிகளில் 50.18 சராசரியில் 10,500 ரன்களை எடுத்துள்ளார். 


 

Comments
ஹைலைட்ஸ்
  • சச்சின், இந்திய அணியின் அணுகுமுறையையும் விமர்சித்தார்
  • சச்சினை, தோனி ரசிகர்கள் தாறுமாறாக கேலி செய்துள்ளனர்
  • ஆப்கான் போட்டியில் தோனி மிகப் பொறுமையாக விளையாடினார்.
தொடர்புடைய கட்டுரைகள்
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
ராணுவ வீரர்களுடன் வாலிபால் ஆடிய தோனி! #ViralVideo
ராணுவ வீரர்களுடன் வாலிபால் ஆடிய தோனி! #ViralVideo
Advertisement