ஒரே பந்து… இரண்டு முறை ஸ்டம்பிங் மிஸ்… தோனி இப்படி தவறு செய்து பார்த்திருக்கீங்க? #Video

Updated: 28 June 2019 10:09 IST

தோனிக்கு இப்படி லைஃப் கொடுத்தது மேற்கிந்தியத் தீவுகளை வெகுவாக பாதித்தது. கடைசி பந்து வரை களத்தில் இருந்த தோனி, 61 பந்துகளுக்கு 56 ரன்கள் அடித்தார்.

MS Dhoni Escapes Stumping, Twice Off The Same Delivery, Following Shai Hope
இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 268 ரன்கள் குவித்தது. © Twitter

நேற்றைய உலகக் கோப்பைப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தன. பேட்டிங் ஃபார்மிற்காக திணறி வரும் தோனி கூட, நேற்று வெறும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர் கொடுத்த வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணி, சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தோனியும் அதை பயன்படுத்திக் கொண்டு அரைசதம் அடித்தார். அது வெற்றிக்கும் வித்திட்டது. 

நேற்றைய போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடியது இந்திய அணி. எதிர்பார்த்ததை விட முன்னரே களமிறங்கினார் தோனி. அப்போது மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் ஃபாபியன் ஆலன் பந்து வீசினார். அதை விளையாட க்ரீஸிலிருந்து வெளியே வந்தார் தோனி. ஆனால், பந்தை மிஸ் செய்தார். தோனி மிஸ் செய்தது போன்றே, விக்கெட் கீப்பரான ஷாய் ஹோப்பும் பந்தை மிஸ் செய்தார். ஒரு முறையல்ல, இரண்டு முறை. 

தோனியின் தடுமாற்றத்தையும், ஹோப்பின் சொதப்பலையும் கீழே இருக்கும் வீடியோவில் பாருங்கள்:

தோனிக்கு இப்படி லைஃப் கொடுத்தது மேற்கிந்தியத் தீவுகளை வெகுவாக பாதித்தது. கடைசி பந்து வரை களத்தில் இருந்த தோனி, 61 பந்துகளுக்கு 56 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 268 ரன்கள் குவித்தது.

தோனியும் கேப்டன் விராட் கோலியும் பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினர். உலகக் கோப்பையில் தொடர்ந்து 4வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் கோலி. அதைத் தொடர்ந்து தோனியும் ஹர்திக் பாண்டியாவும் பார்ட்னர்ஷிப் போட்டனர். அவர்கள் இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர். இந்தப் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

(AFP தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • ஃபாபியன் ஆலன் பந்தில்தான் இந்த சம்பவம் நடந்தது
  • தோனிக்கு லைஃப் கொடுதத்து விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்
  • தோனி, நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
Advertisement