"தோனி 5வது இடத்தில் ஆடியிருந்தால் போட்டியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்" - தோல்விக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர்

Updated: 11 July 2019 13:26 IST

தோனி ஏழாவது இடத்தில் ஆட வந்தார். இந்தியா நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.

"MS Dhoni Coming In At No. 5 Would
தோனி மற்றும் ஜடேஜா ஏழாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். © AFP

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில், இந்தியாவை வெற்றி பெற செய்ய தோனி போராடினார். ஆனாலும் 240 ரன்களை எட்ட முடியாமல், இந்தியா தோல்வியுற்றது. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, உலகக் கோப்பையில் இருந்தி வெளியேறியது. இந்திய அணியின் சிறந்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இருவரும், போட்டியின் இக்கட்டான சூழலில் தோனியின் பேட்டிங் இடத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். "ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக 5வது இடத்தில் தோனி விளையாடியிருந்தால் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். தோனி எதாவது செய்திருப்பார், அடுத்த முனையில் இருப்பவர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்" என்று சச்சின் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் கூறியுள்ளார்.

"இதுபோன்ற கூழலில் தோனியை ஆடவிட்டால், ஆட்டத்தை கட்டுப்படுத்த உதவியிருப்பார். கடைசி நேரத்தில் கூட அவர் ஜடேஜாவிடம் பேசி ஆட்டத்தை கட்டுக்குள் வைத்து ஸ்ட்ரக்கை சரியாக பயன்படுத்த செய்தார்" என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் பேட்டிங் மாற்றத்தை "தவறான உத்தி" என்று கூறியுள்ளார்.

"பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் முன்பாக தோனி களமிறங்கி இருக்க வேண்டும். இது மிகவும் தவறான உத்தி. அந்த இடம் தோனிக்காக அமைக்கப்பட்டது. 2011ம் ஆண்டு உலகக் கோப்பையிலும், யுவராஜ் சிங்கிற்கு பதிலாக தோனி ஆடவந்தார். அதில் இந்தியா வெற்றி பெற்றது" என்று லட்சுமணன் தெரிவித்தார்.

எப்போது ஆடும் இடத்தில் தோனி பெயரை கமெண்டரியில் சொல்லாதது அதிர்ச்சியளித்தாக கங்குலி தெரிவித்தார்.

அந்த நேரத்தில் தோனியின் பேட்டிங் மற்றுமில்லை அடுத்த முனையில் இருக்கும் வீரருக்கும் தோனியின் இருப்பு உதவியாக இருக்கும். சிறப்பான ஆட்டத்தில் பன்ட் தொடர்ந்த நேரத்தில் சாண்ட்னரின் பந்தை அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். பன்ட்டின் விலகல், விராட் கோலிக்கு அதிர்ச்சியளித்தது.

"இந்திய அணிக்கு அப்போது அனுபவம் தேவைப்பட்டது. பன்ட் களத்தில் இருந்த போது தோனி இருந்திருந்தால், சாண்ட்னர் வீசிய அந்த பந்தை பன்ட் அடிக்க விடாமல் தடுத்திருப்பார்" என்றார்.

"தோனி சிறப்பாக செயல்பட்டிருப்பார். அவர் பேட்டிங் செய்யவில்லை என்றாலும், அந்த அமைதி அணிக்கு தேவையானதாக இருந்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் விழாமல் தடுத்திருப்பார். ஜடேஜா ஆடும்போது தோனி இருந்தார். வீரர்களுக்குள் தொடர்பு என்பது மிகவும் தேவையான ஒன்று. தோனி 7வது இடத்தில் ஆட செய்தது சரியான முடிவல்ல" என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

"ஆட்டத்தை முடிக்கும் விதத்தில் அவர் மீது மிகப்பெரிய மாரியாதை உள்ளது. அவரால், சூழலை கட்டுபடுத்தி வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும். அதனால் தான அவரை கடைசியில் ஆட வைத்திருக்கிறார்கள். அவரால் சிக்ஸர் அடிக்க முடியாமல் இல்லை, ஆனால், ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற இதுவே சரியான வழி என்று அவர் நினைக்கிறார்" என்றார்.

மழை காரணமாக முதல் அரையிறுதி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. கேன் வில்லியம்சன் (67) மற்றும் ராஸ் டெய்லர் (74) எடுத்து இந்த இலக்கை நிர்ணயித்தனர்.

இலக்கை அடைய ஆடத் தொடங்கிய இந்திய அணி 24 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நான்கு பேட்ஸ்மேன்களை இழந்தது. பின்னர் ஆட வந்த ஜடேஜா (77) மற்றும் தோனி (50) என ஏழாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

5வது இடத்தில் எதிர்பாராத விதமாக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். மிகவும் மோசமாக அவுட்டான அவருக்கு பிறகும் தோனி களமிறங்காமல், ஹர்திக் பாண்ட்யாவை ஆட வைத்து, தோனி 7வது இடத்தில் ஆட வந்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இலக்கை எட்ட முடியும் என்று தோனி நம்பிக்கை விதைத்தார்
  • தோனி அரைசதம் அடித்து, ஜடேஜாவுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்
  • சச்சின் மற்றும் கங்குலி, தோனி ஆட வந்த இடத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?
தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?
"மீண்டும் குகைக்கு வந்த லெஜண்ட்" - தோனியுடன் புகைப்படம் பகிர்ந்த ரவி சாஸ்திரி
"மீண்டும் குகைக்கு வந்த லெஜண்ட்" - தோனியுடன் புகைப்படம் பகிர்ந்த ரவி சாஸ்திரி
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
Advertisement