ஒருநாள் போட்டியில் ட்ராவிட் சாதனையை கடந்து தோனி சாதனை!

Updated: 18 June 2019 11:29 IST

ஒருநாள் போட்டிகளில் அதிகம் ஆடிய வீரர்களில் டெண்டுல்கர் 463 போட்டிகளில் ஆடி முதலிடத்தில் உள்ளார்.

India vs Pakistan: MS Dhoni Surpasses Rahul Dravid To Become Second Most Capped ODI Player For India
தோனி நான்கு உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்றுள்ளார். © AFP

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடிய தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்திய வீரர்களில் அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். அவர் ராகுல் ட்ராவிட்டின் சாதனையை முறியடித்து இந்த இடத்தை பிடித்தார். ட்ராவின் 340 போட்டிகளில் ஆடியுள்ளார். முதலிடத்தில் டெண்டுல்கர் 463 போட்டிகளில் ஆடியுள்ளார். முன்னாள் கேப்டனான தோனி பல இளைஞர்களுக்கு உத்வேகமளிக்ககூடியவராக இருந்துள்ளார். இதில் கேப்டன் கோலியும் ஒருவர். கீப்பராகவும் அணிக்கு பெரும்பங்காற்றியுள்ளார்.

தோனியின் ஸ்டெம்புகளை பார்க்காமல் செய்யும் ரன் அவுட்கள், மின்னல் வேக ஸ்டெம்பிங்குகள் அனைத்தும் மற்ற அணி கீப்பர்களுக்கு இன்ஸ்ப்ரேஷனாக அமைபவை.

தோனி இந்த உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளில் ஆடி கடைசி கட்டத்தில் முக்கியமான ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார்.

340 போட்டிகளில் ஆடியுள்ள தோனி 10561 ரன்களை குவித்துள்ளார். இதில் 10 சதங்களும், 71 அரைசதங்களும் அடங்கும்.  அதிகபட்சம் 183.

37 வயதான தோனி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இன்னும் அணிக்கு சிறந்த ஃபினிஷராக அவர் விளங்குகிறார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
Advertisement