“எல்லாத்தையும் அவர் பார்த்துப்பாரு..!”- தோனிக்குப் புகழாரம் சூட்டிய பும்ரா

Updated: 28 June 2019 14:58 IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், தனது விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தோனி.

"MS Dhoni Absorbs All Pressure": Jasprit Bumrah Backs Former India Captain
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வெற்றியை அடுத்து, உலகக் கோப்பைத் தொடரில் தோல்விபெறாத ஒரே அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்தியா © AFP

நேற்றைய உலகக் கோப்பைப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தன. பேட்டிங் ஃபார்மிற்காக திணறி வரும் தோனி கூட, நேற்று வெறும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர் கொடுத்த வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணி, சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தோனியும் அதை பயன்படுத்திக் கொண்டு அரைசதம் அடித்தார். அது வெற்றிக்கும் வித்திட்டது. தோனியின் இந்த ஆட்டம் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.

“சில நேரங்களில் தோனி, மிகவும் பொறுமையாக விளையாடுவது போன்று தோன்றும். அவர் மிக அதிக நேரம் எடுத்துக் கொள்வது போலத் தெரியும். ஆனால், கடினமான பிட்ச்களில் ஆடும்போது, நேரம் எடுத்து ஆடுவதுதான் முக்கியம். அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் எப்படி விளையாடினார் என்பதைப் நாம் எல்லோரும் பார்த்தோம். கடைசிவரை போட்டியை எடுத்துச் சென்று, கடைசி ஓவரில் ஆக்ரோஷமாக விளையாடினார். அவரின் அந்த அதிரடியால்தான் நாங்கள் 268 ரன்களை எடுக்க முடிந்தது. அந்த பிட்ச்க்கு அந்த ஸ்கோர், மிகவும் சவாலானது.

இதைப் போன்ற நேரங்களில்தான் அனுபவம் கை கொடுக்கும். தோனி, அனைத்து அழுத்துங்களையும் தனக்குள் எடுத்துக் கொள்வார். இளைஞர்களான நாங்கள் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறோம். அவர் விளையாடியது மெர்சல் ஆட்டம்” என்று கூறினார் பும்ரா.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியின்போது தோனியின் பேட்டிங் குறித்து பலரும் விமர்சனம் செய்தனர். அவர் அந்தப் போட்டியில் 52 பந்துகளுக்கு 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்தப் போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் பும்ரா மற்றும் முகமத ஷமியின் மாஸான பவுலிங் மூலம், போட்டியை இந்தியா வென்றது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், தனது விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தோனி. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வெற்றியை அடுத்து, உலகக் கோப்பைத் தொடரில் தோல்விபெறாத ஒரே அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்தியா. அடுத்து வரும் 3 போட்டிகளில் இந்தியா, ஒன்றில் வெற்றி பெற்றால் கூட, அரையிறுதி இடம் உறுதியாகிவிடும். 

(IANS தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • தோனியின் ஆட்டமே வெற்றிக்கு வித்திட்டது
  • 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார் தோனி
  • இந்தியா, 50 ஓவர்களுக்கு 268 ரன்கள் எடுத்தது
தொடர்புடைய கட்டுரைகள்
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
Advertisement