“ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது!”- பேக்-இன்-ஃபார்ம் ஷமியின் பன்ச்

Updated: 28 June 2019 13:40 IST

வேகப்பந்து வீச்சாளர்களில் புவ்னேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் மட்டுமே முதலில் களமிறக்கப்பட்டனர். புவ்னேஷ்வர் குமாருக்குக் காயம் ஏற்படவே, ஷமி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்டார்

Mohammed Shami Credits Himself For Turnaround In Fortune
"கஷ்டங்கள் அனைத்தையும் நான் தனியாகவே சந்தித்தேன். எனவே, இப்போது வெற்றியும் முழுக்க முழுக்க என்னையே சேரும்." © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உலகக் கோப்பையில் தனது மெர்சலான பவுலிங் மூலம், பல பேட்ஸ்மேன்களின் ஸ்டம்பை பதம் பார்த்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனிப்பட்ட வாழ்க்கையிலும், கிரிக்கெட் வாழ்க்கையிலும் பல சறுக்கல்களை சந்தித்தார் ஷமி. 

சில மாதங்களுக்கு முன்னர் ஷமியின் மனைவி ஹாசின் ஜகான், ‘என் கணவர் என்னை அடிக்கிறார்' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கிறார் ஷமி. மேலும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாத அளவுக்கு ஷமியின் ஃப்டினஸ் மோசமானது. 

இதைத் தொடர்ந்து எடைக் குறைப்பில் இறங்கினார் ஷமி. உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் அவர் இடம் பிடித்தார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களில் புவ்னேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் மட்டுமே முதலில் களமிறக்கப்பட்டனர். புவ்னேஷ்வர் குமாருக்குக் காயம் ஏற்படவே, ஷமி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் ஹாட்-ட்ரிக் எடுத்து அசத்தினார். தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுகள் எடுத்து கெத்து காட்டினார். தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் ஷமி, தனது வெற்றியின் ரகசியம் குறித்துப் பகிர்ந்தார். 

“கடந்த 18 மாதங்கள் என்பது எனது வாழ்க்கையின் கடினமான நேரம். கஷ்டங்கள் அனைத்தையும் நான் தனியாகவே சந்தித்தேன். எனவே, இப்போது வெற்றியும் முழுக்க முழுக்க என்னையே சேரும். 

மீண்டும் கிரிக்கெட் களத்தில் சாதிக்க எனக்கு அருள் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. தனிப்பட்ட வாழ்க்கை முதல் கிரிக்கெட் வார்க்கை வரை எல்லாம் இப்போது சரியாக சென்று கொண்டிருக்கிறது. எனது நாட்டுக்காக நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இப்போது இருக்கிறது.

எனது உடல் எடையைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்தினேன். தற்போது எல்லாம் கைகூடி வருகிறது. எனது டயட், பயிற்சி என அனைத்தையும் சீரான முறையில் வைத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். வலுவாகவும், சீக்கிரம் சோர்வடையாதவாறும் எனது உடல்நிலை இருக்கிறது. என் திறமை மீது எப்போதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. எந்த விக்கெட்டிலும் என்னால் நன்றாக பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது” என்று பெருமிதத்துடன் விளக்கினார். 

உலகக் கோப்பைத் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாடதது குறித்து பேசிய ஷமி, “15 பேர், நாட்டின் பிரதிநிதிகளாக இங்கு வந்துள்ளோம். இந்த 15 பேரில் ஒருவராக இருக்க உங்களுக்கு எதாவது ஸ்பெஷல் திறமை இருக்க வேண்டும் அல்லவா. பொறுமையுடனும் நேர்மறை சிந்தனையுடனும் இருக்க வேண்டியது அவசியம்” என்று பகிர்ந்தார்.

(PTI தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • தனிப்பட்ட வாழ்கையிலும் ஷமி, சோதனைகளை சந்தித்து வந்தார்
  • ஷமியின் மனைவி ஹாசின் ஜகான், அவர் மீது பல குற்றச்சாடுகளை சுமத்தியுள்ளார்
  • வெற்றிக்கு முழுக் காரணம் நானே, ஷமி
தொடர்புடைய கட்டுரைகள்
பங்களாதேஷ் வீரருக்கு முதலுதவி செய்த இந்திய பிசியோவுக்கு குவிந்த பாராட்டு!
பங்களாதேஷ் வீரருக்கு முதலுதவி செய்த இந்திய பிசியோவுக்கு குவிந்த பாராட்டு!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
Advertisement