இந்த உலகக் கோப்பையின் துரதிர்ஷ்டமான விக்கெட் இதுதான்!

Updated: 20 June 2019 11:54 IST

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பவுலிங் செய்த நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணியை 241 ரன்களுக்கு சுருக்கியது. 

Martin Guptill Loses Balance, Hits Wicket During World Cup Match Against South Africa. Watch Video
இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்ரிக்கா, 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம்தான். © AFP

2019 கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் நேற்று தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. ஆனால், தென் ஆப்ரிக்க அணியின் ஸ்கோரை சேஸ் செய்து ஆடிய போது, நியூசிலாந்தின் தொடக்க வீரர்களில் ஒருவரான மார்ட்டின் கப்டில், துரதிர்ஷ்டவசமாக ‘ஹிட் விக்கெட்' மூலம் அவுட் ஆனார். 

இது குறித்து கிரிக்கெட் உலகக் கோப்பையின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு, “புதன் கிழமை நடந்தப் போட்டியில் மார்ட்டின் கப்டில், மிகவும் துரதிர்ஷ்டமான முறையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். (இந்த வீடியோவில் டூப்ளிஸிஸின் ரியாக்‌ஷனைப் பார்க்க மறந்து விடாதீர்கள்” என்ற ஜிஃப் ஒன்றை ட்வீட்டியது. 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பவுலிங் செய்த நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணியை 241 ரன்களுக்கு சுருக்கியது. 

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய நியூசிலாந்து, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி வரை களத்தில் இருந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

அவர், 138 பந்துகளில் 106 ரன்கள் அடித்து, கடைசி வரை களத்தில் இருந்தார். அவருக்குப் பக்க பலமாக கிராந்தோம், அரைசதம் அடித்தார்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்ரிக்கா, 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம்தான்.

Comments
ஹைலைட்ஸ்
  • கப்டில்தான் இந்த துரதிர்ஷ்ட விக்கெட்டுக்கு சொந்தக்காரர்
  • நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது
  • தென் ஆப்ரிக்கா பெறும் 4வது தோல்வி இதுவாகும்
தொடர்புடைய கட்டுரைகள்
டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா!
டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
உலகக் கோப்பை ஃபைனல் ஓவர்த்ரோ சர்ச்சை: மீண்டும் ஆய்வு; என்ன நடக்கும்?
'உலகக் கோப்பை ஃபைனல் ஓவர்த்ரோ சர்ச்சை': மீண்டும் ஆய்வு; என்ன நடக்கும்?
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
இந்த உலகக் கோப்பையின் துரதிர்ஷ்டமான விக்கெட் இதுதான்!
இந்த உலகக் கோப்பையின் துரதிர்ஷ்டமான விக்கெட் இதுதான்!
Advertisement