இங்கிலாந்தை சாய்த்த இலங்கை; வெற்றியின் ரகசியம் என்ன- பகிரும் ‘லெஜண்டு’ மலிங்கா!

Updated: 22 June 2019 12:14 IST

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

England vs Sri Lanka: "Legend" Lasith Malinga Reveals Stock Ball, Basic Plans Worked Against Ben Stokes
இங்கிலாந்தின் இந்த தோல்வி, அந்த அணிக்கு மிகப் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது © AFP

இந்த உலகக் கோப்பையை வெல்லப் போகும் அணி என்று சொல்லப்படும் இங்கிலாந்தும், ஃபார்முக்காக தொடர்ந்து சிரமப்பட்டு வரும் இலங்கையும் நேற்று மோதின. இங்கிலாந்து இந்தப் போட்டியை சுலபமாக வென்றுவிடும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், லசித் மலிங்காவின் அதிரடியான பவுலிங்கால் இலங்கை, வெற்றிவாகை சூடியது. இந்த வெற்றியின் ரகசியம் என்ன என்பது குறித்து மலிங்கா, தற்போது பகிர்ந்துள்ளார். 

“முக்கியமான பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பிறகு, பென் ஸ்டோக்ஸ் மட்டும் எங்களுக்குக் கடைசி வரை அச்சுறுத்தலாகவே இருந்தார். அவர் எங்களின் பவுலிங்கில் 2, 3 பவுண்டரிகளை அடித்தார். ஆனால், எங்களின் திட்டத்தில் தெளிவாக இருந்தோம். தொடர்ந்து லைன், லென்த் பந்துகளை அவருக்கு வீசிக் கொண்டே இருந்தோம். கண்டிப்பாக லூஸ் பந்து போட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதுவே நாங்கள் வெற்றி பெற உதவியது” என்று வெற்றியின் ரகசியத்தை உடைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்தின் இந்த தோல்வி, அந்த அணிக்கு மிகப் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. காரணம் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து, 4-ல் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. அடுத்த 3 போட்டிகளை அந்த அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த 3 அணிகளும் மிகவும் வலுவாக இருப்பதனால், இங்கிலாந்தின் அரையிறுதிப் பயணம் அவ்வளவு சுலபமாக இருக்காது. 

அதே நேரத்தில் இலங்கை 6 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், 2 போட்டிகள் கைவிடப்பட்டதால் 6 புள்ளிகளுடன், தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இதனால், அந்த அணியின் அரையிறுதிக் கனவு பலிக்க வாய்ப்புள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • இலங்கையின் 'லெஜண்டாக' பார்க்கப்படுகிறார் மலிங்கா
  • இலங்கை கேப்டன் கருணரத்னே, மலிங்காவை புகழ்ந்துள்ளார்
  • இங்கிலாந்தின் தோல்வி, அந்த அணிக்கு பிரச்னையாக மாறியுள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
'என் டைம் முடிஞ்சி போச்சு' - 15 ஆண்டுகால கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த மலிங்கா!
"போட்டியின் வெற்றியாளர்" மலிங்காவுக்கு ரோஹித் ஷர்மா செய்த ட்விட்!
"போட்டியின் வெற்றியாளர்" மலிங்காவுக்கு ரோஹித் ஷர்மா செய்த ட்விட்!
பங்களாதேஷுடனான முதல் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுகிறார் மலிங்கா!
பங்களாதேஷுடனான முதல் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுகிறார் மலிங்கா!
உலகக் கோப்பை 2019: ‘அள்ளு’ கொடுத்த பூரான்; வெ.இண்டீஸை போராடி வீழ்த்திய இலங்கை!
உலகக் கோப்பை 2019: ‘அள்ளு’ கொடுத்த பூரான்; வெ.இண்டீஸை போராடி வீழ்த்திய இலங்கை!
இலங்கையின் அரையிறுதிக் கனவு நனவாகுமா… இன்று தென்ஆப்ரிக்காவுடன் பலப்பரிட்சை! #Preview
இலங்கையின் அரையிறுதிக் கனவு நனவாகுமா… இன்று தென்ஆப்ரிக்காவுடன் பலப்பரிட்சை! #Preview
Advertisement