தோனி குறித்த சர்ச்சை கருத்துக்கு விளக்கமளித்த குல்தீப் யாதவ்!

Updated: 15 May 2019 19:27 IST

தோனி குறித்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக குல்தீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

MS Dhoni-Kuldeep Yadav Statement Row: Spinner Clarifies Statement On Former India Captain
தோனி குறித்து செய்தி பரவியதும், ரசிகர்கள் பலர் குல்தீப்பை வறுத்தெடுத்தனர். © AFP

தோனி குறித்து பரவி வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் குல்தீப் யாதவ். அவர் தோனி குறித்து, "அவரது கருத்தில் அவர் உறுதியாக இருப்பார். சில நேரங்களில் அதுதவறாக இருந்தாலும் அவரிடம் அதனை எடுத்து சொல்ல முடியாது. ஆட்டத்தின் போது தோனி அவ்வளவாக பேச மாட்டார். ஓவர்களின் நடுவே திடீரென்று வந்து சில விஷயங்களை சொல்வார். அதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்" என்று செய்தி நிறுவனம் பதிவிட்டிருந்தது. இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக குல்தீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இது முற்றிலும் தவறாக செய்தி" என்றார். உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருக்கும் குல்தீப், #Much respect Mahi bhai" என்று பதிவை முடித்தார்.

"மறுபடியும் ஒரு கட்டு கதையாக ஒரு வதந்தியை முன் வைத்துள்ளது செய்தி நிறுவனம். சம்மந்தம் இல்லாமல் பரவியிருக்கும் செய்தி முற்றிலும் பொய். யாரை குறித்தும் நான் எந்த தேவையற்ற கருத்தும் தெரிவிக்கவில்லை" என்று இஸ்டாகிராமில் கூறியுள்ளார் குல்தீப்.

தோனி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையை வென்று தந்த வெற்றிகரமான கேப்டனாவார்.

சியட் கிரிக்கெட் தரவரிசை விருதுகளில் பேசிய குல்தீப் யாதவ் ''அவரது கருத்தில் அவர் உறுதியாக இருப்பார். சில நேரங்களில் அதுதவறாக இருந்தாலும் அவரிடம் அதனை எடுத்து சொல்ல முடியாது'' என்று கூறினார் என்று நியூஸ் ஏஜன்சியில் பதிவிடப்பட்டது. என்டிடிவியிலும் இந்த செய்தி பதிவிடப்பட்டது.

இந்த செய்தி பரவியதும், ரசிகர்கள் பலர் குல்தீப்பை வறுத்தெடுத்தனர்.

pk8rh4l

Photo Credit: Instagram

2019 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று ரன்னர் அப் பட்டம் வென்றது. 

தோனி 2019 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 416 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 83.2, ஸ்ட்ரைக் ரேட் 134.62. அவர் அதிகபட்சமாக ஆர்சிபி அணியுடன் ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற போட்டியில் 48 பந்தில் 84 ரன்கள் குவித்தார்.

தோனி மற்றும் குல்தீப் யாதவ் 2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளனர். இது தோனி பங்கேற்கும் நான்காவது உலகக் கோப்பை தொடராகும். 

ஜூன் 5ம் தேதி தென்னாப்பிரிக்க அணியுடன் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆடவுள்ளது இந்தியா.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஒருநாள் போட்டிகளில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் பெற்ற முதல் இந்தியர் ஆனார் குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் பெற்ற முதல் இந்தியர் ஆனார் குல்தீப் யாதவ்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
Advertisement