கோலி, ஸ்மித் உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவார்கள் - ஸ்டோக்ஸ்

Updated: 21 May 2019 12:19 IST

விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 2019 உலகக் கோப்பையின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Virat Kohli, Steve Smith Will Continue To "Weave Their Magic" At World Cup, Says Ben Stokes
இருவரும் இந்த உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். © AFP

விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 2019 உலகக் கோப்பையின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. கோலி ஓராண்டாகவே சிறப்பாக ஆடி வருகிறார். ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்கு பின் திரும்பி சிறப்பாக ஆடி வருகிறார். இருவரும் இந்த உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

"இருவரும் அசாதாரணமான வீரர்கள் மற்றவர்களை விட அவர்கள் போட்டியை எளிதாக கையாள்கிறார்கள். இருவரது ஆட்டமும் வெவ்வேறு வகையயானவை. இருவருக்கும் எதிராக போட்டி என்று வரும் போது வெற்றிக்காக மேலும் சிறப்பாக ஆட வேண்டும். ஆனால் அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் அவர்கள் சிறந்த வீரர்கள்" என்றார் ஸ்டோக்ஸ்.

உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை முழுமையாக 4-0 என்று வென்றது இங்கிலாந்து.

"உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் எங்கள் பெயரும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறதும் கடந்த 4 வருடங்களாக சிறப்பாக ஆடி வருகிறோம். நாங்கள் நம்பர் 1 அணி என்ற பெருமையை எடுத்து செல்ல மாட்டோம். 2017 சாம்பியன் கோப்பையில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆனால் எங்களுக்கு சாதகமில்லாத சூழலில் பாகிஸ்தான் எங்களை வீழ்த்தியது. தற்போது அனைத்து சூழலுக்கும் எங்களை தயார் படுத்தி வைத்துள்ளோம்" என்றார் ஸ்டோக்ஸ்.

உலகக் கோப்பையில் இங்கிலாந்து மே 30ம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே
இறுதிப்போட்டியை இங்கிலாந்திலேயே 'காணப்போகும்' இந்திய கிரிக்கெட் அணி... காரணம் என்ன?
"ஓய்வு குறித்து தோனி எதுவும் கூறவில்லை" - கேப்டன் விராட் கோலி
"ஓய்வு குறித்து தோனி எதுவும் கூறவில்லை" - கேப்டன் விராட் கோலி
''முக்கால் மணிநேர மோசமான ஆட்டம் தோல்வியை தந்து விட்டது'' - விராட் கோலி ஆதங்கம்!!
Advertisement