‘ஒரு 3டி கிளாஸ் பார்சல்…!’- அம்பத்தி ராயுடுவின் குமுறல்

Updated: 17 April 2019 11:58 IST

இந்தியாவுக்காக ராயுடு, 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 47.05 சராசரியில் 1,694 ரன்கள் குவித்துள்ளார்.

"Ordered 3D Glasses To Watch World Cup": Ambati Rayudu Posts Cryptic Tweet After Snub
இந்தியா சார்பில் நான்காவதாக களமிறங்கும் வீரர் யார் என்ற கேள்வி, உலகக் கோப்பை அணித் தேர்வில் பெறும் கேள்வியாக இருந்தது. © AFP

எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணி, இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அம்பத்தி ராயுடு கண்டிப்பாக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை. இது பலரை அதிர்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராயுடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அம்பத்தி ராயுடு ட்விட்டரில், ‘உலகக் கோப்பையைப் பார்க்க 3டி கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்' என்றுள்ளார். விஜய் ஷங்கரின், ‘முப்பரிமாண' திறமையால் அணியில் சேர்க்கப்பட்டார் என்று கூறப்பட்டதை அடுத்து, ராயுடு இப்படி கருத்து தெரிவித்துள்ளார்

இந்தியா சார்பில் நான்காவதாக களமிறங்கும் வீரர் யார் என்ற கேள்வி, உலகக் கோப்பை அணித் தேர்வில் பெறும் கேள்வியாக இருந்தது. அந்த இடத்துக்கு ராயுடு மற்றும் விஜய் சங்கர் இடையில் கடும் போட்டி நிலவியது. ஆனால், கடைசியில் விஜய் ஷங்கரே அணியில் சேர்க்கப்பட்டார். விஜய் ஷங்கர் பவுலிங்கிலும் திறன்பட செயல்படுவார் என்பதே அவரின் தேர்வுக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய ஒருநாள் தொடரிலும், ராயுடு ஃபார்ம் இல்லாமல் திணறி வந்தார். இதைப் போன்ற காரணங்களால் ராயுடு அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்தியாவுக்காக ராயுடு, 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 47.05 சராசரியில் 1,694 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை அவர் 3 சதம் மற்றும் 10 அரை சதங்களை அடித்துள்ளார். 
 

Comments
ஹைலைட்ஸ்
  • ஃபார்ம் இல்லாமல் திணறி வருகிறார் ராயுடு
  • ஐபிஎல் தொடரிலும் ஃபார்மிற்காக ராயுடு திணறி வருகிறார்
  • ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரேயொரு அரைசதம் மட்டுமே ராயுடு அடித்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" -
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" - '3டி' ட்விட் குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத்!
அம்பத்தி ராயுடுவின் ஓய்விற்கு கோலியின் ரியாக்சன் என்ன தெரியுமா..?
அம்பத்தி ராயுடுவின் ஓய்விற்கு கோலியின் ரியாக்சன் என்ன தெரியுமா..?
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு!
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு!
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
தோனிக்கு காய்ச்சல்... கீப்பிங் செய்து ட்ரெண்டான 3டி ராயுடு!
தோனிக்கு காய்ச்சல்... கீப்பிங் செய்து ட்ரெண்டான 3டி ராயுடு!
Advertisement